கோழி சூப்

 photo kolisoup_zps2690498d.jpg

 6 - 8  பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

 1. குஞ்சுக் கோழி - 1
 2. வெங்காயம் - 250 கிராம்
 3. உள்ளி - 5 பல்லு
 4. மிளகு  - 1 மே . க ( நிரப்பி )
 5. மல்லி - 1 மே . க ( நிரப்பி )
 6. வெந்தயம் - 1 மே . க ( நிரப்பி )
 7. நற்சீரகம் - 1 மே . க ( நிரப்பி )
 8. கறுவா - 3" ஒரு துண்டு
 9. மஞ்சள் - ஒரு துண்டு
 10. கராம்பு - 10
 11. தேசிப் பழம் - 2
 12. உப்பு - அளவிற்கு 
 13. தண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )


செய்முறை :
 • மிளகு . மல்லி , வெந்தயம் , நற்சீரகம் , கருவா , மஞ்சள் ,கராம்பு என்பவற்றை ஓரளவாக வறுத்து நன்றாக இடித்து எடுத்துப் பொட்டலமாக கட்டி வைத்துக் கொள்க ( பொட்டலம் மெல்லிய துணியில் தளர்வாக கட்டபாடல் வேண்டும் )

 • வெங்காயம் உள்ளி என்பவற்றை துபரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க 

 • கோழியின் எலும்புள்ள தசை பகுதியை இயலுமான அளவு வெட்டி நீக்கிவிட்டு எலும்பை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்க .

 • பின்பு பானையில் 12 தம்ப்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் வெட்டிய வெங்காயம் , உள்ளி , நொறுக்கிய எலும்பு என்பவற்றை போட்டு அவிய விடவும். 

 • இவை அரைப்பதமாக அவிந்ததும் கட்டிவைத்துள்ள பொட்டலம் அளவிற்கு உப்பு என்பவற்றை இட்டு  மெல்லிய நெருப்பில் மூடி அவியவிட்டு நன்றாக அவிந்து நீர் அரைப்பதமாக வற்றி வரத்தொடங்கியதும் இறக்கி வடித்து தேசிப்பழச்சாறு கலந்து பரிமாறலாம் .

மரக்கறி சூப்

 photo marakarisoop_zps476857dd.jpg
8 - 10 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
 1. வெங்காயம் - 100 கிராம்
 2. கரட் - 100 கிராம்
 3. கோவா - 100 கிராம்
 4. லீட்ஸ் - 100 கிராம்
 5. தக்காளி - 100 கிராம்
 6. உருளை கிழங்கு - 100 கிராம்
 7. பருப்பு - 100 கிராம்
 8. கறிவேப்பிலை - 1 நெட்டு
 9. உள்ளி - 5 பல்லு
 10. மிளகு தூள் - அளவிற்கு
 11. உப்புத்த் தூள் - அளவிற்கு
 12. தேசிப் பழம் - 1
 13. தண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )
 14. சிக்கின் கியூப் - 2 கட்டி ( விரும்பினால் )

செய்முறை :
 • மரக்கறி , உள்ளி வெங்காயம் என்பவற்றை துப்புரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க . 

 • பின்பு பாத்திரத்தில் 12 தம்ப்ளர் தண்ணீரை விட்டு வெட்டி வைத்துள்ள மரக்கறி வகைகள் , கறிவேப்பிலை , கழுவிய பருப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

 • மரக்கறி நன்றாக அவிந்த பின்பு சிக்கின் கியூப் . உப்பு என்பவற்றை அளவிற்கு சேர்த்து நன்றாக மசித்துக் கொண்ட பின்பு சூப்பை வடித்தெடுத்து மிளகு தூள் , தேசிப்புளி என்பவற்றை இட்டு  கலந்து சூட்டுடனேயே பரிமாறலாம் . 


சீராக அரையல்


 photo seragavaruval_zps6346a2ca.jpg
 
 
2 - 3 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

 1. சீரகம் - 25 கிராம்
 2. மஞ்சள் - 1 துண்டு
 3. மிளகு - 10
 4. வேர்க்கொம்பு - 1துண்டு
 5. உள்ளி - 3 பல்லு
 6. பழப்புளி - பாக்களவு
 7. உப்பு - அளவிற்கு முட்டை - 2 அல்லது அவித்த சுறா மீன் 4 துண்டு
 8. நல்லெண்ணெய் - 2 மே. க
 9. தண்ணீர் - 2 தம்ளர்

செய்முறை :

 • அம்மியை துப்புரவு செய்து வேர்க்கொம்பு , மஞ்சள் என்பவற்றை நொறுக்கி அரைத்து பின் உள்ளி , மிளகு , சீரகம் என்பவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீரும் விட்டு பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க .

 • அரைத்த கூட்டை தாய்ச்சியில் இட்டு 2 தம்ப்ளர் தண்ணீரில் கரைத்த புளிகரைசலை விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து , பொங்கி கொதித்ததும் அளவிட்ட்கு உப்பு சேர்த்து முட்டையை உடைத்துவிட்டு முட்டை அவிந்து வரும் நிலையில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி சூட்டுடனேயே பரி மாறலாம் .

குறிப்பு :

வேர்க்கொம்பு , மஞ்சள் , மிளகு , சீரகத்தூள்கள் இருப்பின் கிரைண்டரில் இட்டு அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்து மேற்கூறிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம் .
 
 
 
 

பார்லிக்கஞ்சி

 photo BAA0BBE0BB00BCD0BB20BBF0B950BCD0B950B9E0BCD0B9A0BBF0_zps417c3179.jpg

 


4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
 1. பார்லி - 2 மே . க ( நிரப்பி )
 2. உப்பு - அளவிற்கு
 3. தண்ணீர் - 5 தம்ப்ளர்

செய்முறை :
 • பார்லியை கழுவி வைத்துப் பாத்திரத்தில் போட்டு முக்கால் மணி நேரம் ஊறவிட்டு மீண்டும் தண்ணீரை வடித்துவிட்டு பார்லியை தாய்ச்சியில் போட்டு 5 தம்ளர் தண்ணீரை விட்டு வேகவிடவும் .

 • பார்லி கஞ்சி வேகும்போது  நீர் மெல்லிய றோஸ் நிறத்தை அடையும் பருவத்தில் இறக்கி வடித்து அளவிற்கு உப்பு சேர்த்துக் கலக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

குறிப்பு :
 • உப்புக்கு பதிலாக தேசிப்புளியும் சீனியும் விருப்பதிற்கு ஏற்றவாறு சேர்த்து பரிமாறலாம் 

 • பார்லிக்கு பதிலாக சவ்வரிசியை பாவித்து இவ்வனமே கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம் .

 • சவ்வரிசியாயின் மெல்லிய சாம்பல் நிறத்தை அடையும்போது இறக்கி வடிக்கவும்

புளிக்கஞ்சி

 photo pulikanchi_zps0ddf7793.jpg

 
3 - 4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் : 1. புழுங்கலரிசி - 1 சுண்டு
 2. நெத்தலி கருவாடு - 100 கிராம்
 3. வெங்காயம் - 100 கிராம்
 4. செத்தல் மிளகாய் - 10
 5. மஞ்சள் - 1 சிறிய துண்டு
 6. மிளகு - 10
 7. உள்ளி - 10 பல்லு
 8. கறிவேப்பிலை - 2 நெட்டு
 9. தேங்காய் - பாதி
 10. பழப் புளி ( விதை நீகியக்து ) - ஒரு பாக்களவு
 11. உப்பு - அளவிற்கு
 12. தண்ணீர் - 3 1/2 போத்தல்

செய்முறை :
 • தேங்காயை துருவி ஒரு தம்ப்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பால் பிழிந்து வைத்துக் கொள்க .

 • கருவாட்டை கழுவி வைத்துக் கொள்க 

 • வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க .

 • பழப்புளியை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்க .

 • செத்தல் மிளகாய் , உள்ளி ,மிளகு , மஞ்சள் என்பவற்றை அளவிற்கு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க.

 • பின்பு பாத்திரத்திலிட்டு 3 போத்தல் தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்கு கொதித்த பின்பு அரிசியை கழுவிப்போட்டு அவியவிடவும் . அரிசி அரைப் பதமாக அவிந்தவுடன் கருவாடு , வெங்காயம் கறிவேப்பிலை என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

 • அரிசி நன்றாக அவிந்ததும் அரைத்த கூட்டு , பால் கரைத்து வைத்துள்ள பழப்புளி அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு கலந்து மூடி வாசம் வரும்வரை அவியவிட்டு இறக்கி சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

சமையலறை குறிப்புகள் பகுதி - 5

 cooking tips

 • பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

 • வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

 • சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

 • சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

 • தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்

 • உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

 • கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

 • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

 • தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

 • பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
 • இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

 • தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

 • எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

சமையலை ரு‌சியா‌க்க கு‌றி‌ப்புக‌ள்- சமையலறை குறிப்புகள் பகுதி 4

cooking tips
 • குடைமிளகாய் ஸ்டஃப்பிங் செய்யும்போது அது முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாகக் காணப்படும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்
 • நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும். ஸ்பைசியாகவும் காணப்படும்.
 • எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும், சுவையு‌ம் இது எ‌ன்ன புது‌க் கு‌ழ‌ம்பு எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்.
 • எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். ஆக்ஸிடைஸ் ஆவதால் நிகழும் அழுகை குறையும்.
 • அரோக்கியத்திற்கு, கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

சமையலறை கு‌றி‌ப்புக‌ள் பகுதி - 3

 photo samaiyalaraikurippukal_zps322c5f12.jpg


 • காலை‌யி‌ல், இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

 • தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

 • பூரி சு‌ட்ட ‌சி‌றிது நேர‌த்‌திலேய நமத்து போ‌ய் தோசையா‌கி‌விடாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

 • பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 • சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.

 • பரோ‌ட்டா செ‌ய்யு‌ம் போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை 

 • ‌வீ‌ட்டி‌ல் எ‌ப்போதாவது பரோ‌ட்டா செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌சில குளறுபடிகளையு‌ம் செ‌ய்து‌விடுவோ‌ம்.

 • அதை த‌வி‌ர்‌க்க ‌சில யோசனைக‌ள்

 • பரோ‌ட்டா‌வி‌ற்கு உ‌ள்ளே மசாலா வை‌த்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இ‌ல்லை எ‌ன்றா‌ல் பரோ‌ட்டா ஊ‌றி பொத பொத எ‌ன்று ஆ‌கி‌விடு‌ம்.

 • முள்ளங்கி வை‌த்து பரோட்டா செ‌ய்தா‌ல், மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் அ‌திக ‌நீ‌ர் இரு‌க்கு‌ம், அதனை த‌னியாக எடு‌த்து‌விடவு‌ம். அதன் தண்ணீரை ‌வீணா‌க்காம‌ல் அதிலேயே பரோ‌ட்டா‌வி‌ற்கு மாவு பிசையலாம்.

 • தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால், பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலு‌‌க்கு‌ம் ந‌ல்ல‌து.

 • இது வட இ‌ந்‌திய‌ர்க‌ள் அ‌திகமாக செ‌ய்யு‌ம் சமைய‌ல் முறையாகு‌ம். எதையு‌ம் நா‌ம் த‌னியாக ஒது‌க்காம‌ல், எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்து பா‌ர்‌ப்போ‌ம். ச‌ரியாக வரு‌ம்வரை அதை ‌விடுவ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ப்போ‌ம்.

அவியல் கஞ்சி

 photo aviyalkanji_zps7659d25b.jpg
 

3 - 4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள்  : -

 1. புழுங்கல் அரிசி - 1 சுண்டு
 2. தேங்காய் - பாதி
 3. பச்சை மிளகாய் - 15
 4. வெங்காயம் - 15
 5. கறிவேப்பிலை - 2 நெட்டு
 6. தண்ணீர் - 31/2 போத்தல்
 7. மஞ்சள் தூள் - 2
 8. தேசிப் பழம் - 2
 9. உப்பு  - அளவிற்கு

செய்முறை :-
 • தேங்காயை துருவி இரண்டு தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்க .

 • வெங்காயம் மிளகாயை துப்பரவாக்கி ஈர்க்கில் மாறி மாறி கோர்த்து வைத்துக் கொள்க 

 • பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்கவைத்து பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி அரைப்பதமாக அவிந்தவுடன் , வெங்காயம் , மிளகாய் கோர்த்து வைத்துள்ள ஏற்க்கையும் கறிவேப்பிலை நெட்டையுமிட்டு  மூடி அவிய விடவும் .

 • அரிசி நன்றாக அவிந்ததும் , ஈர்க்கில் கோர்த்து வைத்துள்ள வெங்காயம் , மிளகாயை எடுத்து ஈர்க்கை நீவிவிட்டு பிறிதொரு பாத்திரத்தில் இட்டு நன்றாக மசித்துகொண்ட பின்பு அக்கலவையை அவிந்துகொண்டிருக்கும் அரிசியில் விட்டு தேங்காய் பால் அளவிற்கு உப்பு மஞ்சள் தூள் என்பவற்றையும் சேர்த்து நன்றாக துழாவி காய்ச்சி இறக்கி கறிவேப்பிலை நெட்டை நீக்கிய பின்பு , தேசிப்புளி விட்டுச் சேர்த்து சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ் - 2

 photo samaiyalaraikurippukal_zps322c5f12.jpg

முட்டஅடிக்கடி கெட்டுபபோவது, பாலகாய்ச்சுமபோதஅடிபிடிப்பதபோன்பிரச்சனைகளநீங்களஇவ்வளவநாளசமாளித்ததபோதும், அவற்றிலிருந்தவிடுதலபெசிசமையலறகுறிப்புகளஉங்களுக்காகவே ....

1. பச்சமிளகாயிலஅதனகாம்பபாகத்தஅகற்றி அதஃப்ரிட்ஜிலவைக்கவும். அவ்வாறசெய்தாலநீண்நாட்களுக்கஅந்மிளகாயஃப்ரெஷ்ஷாபயன்படுத்தலாம்.

2. காளான்களஅலுமினியமபாத்திரங்களிலசமைக்கக்கூடாதஏனென்றாலஅவபாத்திரத்தகருமையாமாற்றிவிடும்.

3. தோலபொருள்களிலமைப்பேனகுறிகளஅழிப்பதற்கபாலுமசிறிதளவஸ்பிரிட்டுமகலந்தசுத்தமசெய்யவும்.

4. எண்ணெயகறையஅழிப்பதற்கு, எலுமிச்சமபழத்தஇரண்டதுண்டாவெட்டி அதஉப்பிலவைக்கவும். பின்னரஅந்துண்டுகளவைத்ததேய்க்கவும்.

5. மணகறைகளதுணிகளிலிருந்தநீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளவேவைத்தண்ணீரிலஅந்துணியவைத்தசுத்தமசெய்யவும்.

6. பாலபொங்குமபோதஅதஅடக்முடியவில்லஎன்றால், சிரமப்படாமலஅதஅடக்குவதற்கசிறிததுளிகளகுளிர்ந்தண்ணீரதெளிக்கவும்.

7. பாலகாய்ச்சுவதற்கமுன், அந்பாத்திரத்தநன்கதண்ணீராலசுத்தமசெய்பின்னரகாய்ச்சினால், பாலபாத்திரத்தினஅடியிலபிடிப்பததவிர்க்கலாம்.

8. முட்டையவேவைக்குமபோதஅதனுளஇருப்பவவெளியிலவராமலஇருப்பதற்கு, வேவைக்குமதண்ணீரிலஒரடீஸ்பூனவினிகரவிடவும். அவ்வாறவிட்டால், முட்டையினஓடவெடித்தாலுமகூஉள்ளஇருப்பவவெளியிலவராது.

9. ஒரமுட்டையானதகெடாமலபுதியதாஇருக்கிறதஎன்பதஅறிவதற்கு, அந்முட்டையகுளிர்ந்உப்பதண்ணீரிலமுழுகும்படியாவைக்கவும். முட்டையானதமுழுகாமலமேலவந்தாலஅதநீங்களதூக்கி எறியலாம். அததண்ணீரிலமூழ்கினாலஅதசமையலிலபயன்படுத்தலாம்.

10. வெங்காயமநறுக்குமபோதகண்ணிலிருந்ததண்ணீரவராமலஇருப்பதற்கு, நறுக்வேண்டிவெங்காயங்களமுன்பஃப்ரிட்ஜிலவைத்பின்னரஆரம்பிக்கலாம்.

11. உருளைக்கிழங்குகளவெங்காயங்களுடனவைத்தாலஅவசீக்கிரமாகெட்டுப்போய்விடும். அவ்வாறஅவகெடாமலஇருப்பதற்கு, அந்உருளைக்கிழங்குகளஇருக்குமபைக்குளஒரஆப்பிளபழத்தவைக்கவும்.

12. வெங்காயத்தினநாற்றமஉங்களவாயிலிருந்தபோவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்டதானசிறந்வழி.

13. பாலபுளிக்காமலஇருப்பதற்கு, ஏலக்காயபாலகாய்ச்சுமபோதஅதனுடனசேர்க்கவும். அவ்வாறசெய்தாலநீண்நேரத்திற்கபாலபுளிக்காமலஇருக்கும்.

14. தோலஉரித்உருளைக்கிழங்குகளகெடாமலவைப்பதற்கசிதுளிகளவினிகராலதெளித்தஃப்ரிட்ஜிலஅதவைக்கவும்.

15. முட்டைகளை 30-40 நாட்களவரகெடாமலவைப்பதற்கு, அதனமேலஒரபிரஷாலசமையலஎண்ணையதடவவும

சீராக கஞ்சி

 photo ThengaiPalRasam_zps4b7f9f29.jpg4 - 6 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :
 1. பச்சை அரிசி - 1 சுண்டு ( நிரப்பி )
 2. நற்சீரகம் - 2 மே. க ( நிரப்பி )
 3. மிளகு - 1 தே . க ( நிரப்பி )
 4. மஞ்சள் - 2" துண்டு
 5. உப்பு - அளவிற்கு
 6. தண்ணீர் - 4 போத்தல்

செய்முறை :
 • தேங்காயை துருவி ஒரு போத்தல் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்துக் கொள்க .

 • சீரகம் , மிளகு , மஞ்சள் மூன்றையும் எடுத்து தண்ணீரை அளவிற்கு விட்டு பசுந்தையாக அரைத்துக் கொள்க .

 • பின்பு அரைத்த கூட்டை தீங்கை பாலில் இட்டு கரைத்து வைத்துக் கொள்க 

 •  பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து , கொதித்த பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி முக்கால் பதமாக அவிந்த பின்பு , கரைத்து வைத்துள்ள தீங்கை பால் , அளவுக்கு உப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

 • கஞ்சி நன்றாக பொங்கி கொதித்து அவிந்து வாசனை வரத் தொடங்கியதும் நன்றாக துழாவி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

தேங்காய் பால் இரசம்

 photo kanchithengaa_zpse848dbbb.jpg
2 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :

 1. தேங்காய் பால் - 2 தம்ளர் ( பாதித் தேங்காய் )
 2. தேசிப் பழம் - 1
 3. கடுகு - 1 சிட்டிகை
 4. நற்சீரக போடி - 1 மே. க ( நிரப்பி )
 5. மிளகு தூள் - 1 தே. க ( மட்டமாக  )
 6. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே. க ( நிரப்பி )
 7. நல்லெண்ணெய் - 2 மே. க
 8. உப்பு - அளவிற்கு

செய்முறை :

 • தாய்ச்சியில் நல்லெண்ணெய் விட்டு கொதித்தபின்பு கடுகை போட்டு வெடிக்க வைத்து வெங்காயத்தை இட்டு வதங்கவிடவும் . 

 • வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு சீரகப்பொடி , முலகு தூள் , உப்பு தூள் என்பவற்றை கலந்து பாலையும் விட்டு நன்றாக கலக்கிப் பொங்கி கொதிக்கும்வரை இடைவிடாது துலாவி காய்ச்சி கொதித்ததும் இறக்கி ஓரளவான சூட்டுடன் தேசிப்புளி சேர்த்து கலந்து பரிமாறலாம் .

மிளகு ரசம்


 photo milagurasam_zps074ddc5f.jpg


4 - 5 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :


 1. மிளகு - 1 தே.க ( நிரப்பி )
 2. மல்லி - 2 மே . க ( நிரப்பி )
 3. நற்சீரகம் - 1 தே.க ( நிரப்பி )
 4. செத்தல் மிளகாய் - ஒன்று
 5. உள்ளி - 8 பல்லு
 6. பழப்புளி - ஒரு பாக்களவு ( விதை நீக்கியது)
 7. பெருங்காயம் - ஒரு குண்டு மணியளவு
 8. உப்பு - அளவுக்கு
 9. தண்ணீர் - 4 தம்ளர்
 10. தேங்காய் பூ - 3 மே. க ( நிரப்பி )


செய்முறை :
 • தேங்காய் பூவில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பால் பிழிந்து கொள்க 

 • ஒரு தம்ளர் தண்ணீரில் பழப் புலியை கரைத்து வைத்துக் கொள்ளவும் 

 • மல்லி , சீரகம் , மிளகாய் , உள்ளி என்பவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்தேடுத்துக் கொள்க .

 • பின்பு இடித்த கலவையை பாத்திரத்திலிட்டு , தேங்காய் பால் பழ புலி கரைசல் 2 தம்ளர் தண்ணீர் என்பவற்றை விட்டு கரைத்து அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் . ரசம் பொங்கி கொதித்ததும் அப்பாத்திரத்தின் மூடியில் பெருங் காயத்தை உரைத்து அம மூடியால் பாத்திரத்தை நன்றாக மூடி சிறிது நேரம் வைத்து பின்பு இறக்கி கரண்டியால் நன்றாக கலக்கிகொண்ட பின்பு வடித்தெடுத்து பரிமாறலாம் .

சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ் - 1 !!

 • photo samaiyalaraikurippukal_zps322c5f12.jpg 
 • சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை  பல பேருக்குத் தெரிஞ்சும் இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்குத் தெரியாத டிப்ஸை தெரிஞ்சுகொள்ளுங்கள்

 • * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

 • * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்

 • * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 • * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

 • * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

 • * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

 • * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

 • * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

 • * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

 • * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

 • * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம

 • * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்
 • * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்

 • * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

 • * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

 • * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

 • * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

 • * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்க

 • * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

 • * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

 • * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

 • * ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

 • * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

 • * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

 • * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

 • * தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

 • * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

 • * உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

முக்கூட்டு கூழ்

 photo kelvaragukool_zpsa99a4c4e.jpg
 


4 - 5 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

 1. குரக்கன் - 250 கிராம்
 2. பொட்டுக் கடலை - 250 கிராம்
 3. கச்சான் முத்து - 250 கிராம்
 4. ஏலப்பொடி - 1 தே . க .( மட்டமாக )
 5. சீனி - 6 மே. கரண்டி ( நிரப்பி )
 6. உப்பு - அளவிற்கு
 7. தண்ணீர்/ தேங்காய் பால்  - 5 தம்ளர்

செய்முறை :

 • குரக்கன் கடலை என்பவற்றை தனித் தனியாக துப்பரவாக்கி கழுவி காய வைத்துக் கொள்க .

 • கச்சான் முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திரிதேடுத்துக் கொள்க .

 • திரிதேடுத்த மாவில் ஒரு தம்ளர் மாவை எடுத்து தாய்ச்சியில் போட்டு 6 மேசை கரண்டி சீனி இட்டு கலந்து 5 தம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .

 • கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு ஏலப்பொடி என்பன சேர்த்து கல்லாகி இறக்கி ஆரிய பின் பரிமாறலாம் .

அறோட்டு மா கூழ்

 photo aroddumaakool_zps7cc085ba.jpg2 - 3 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

 1. அறோட்டுமா - 4 மே. கரண்டி ( நிரப்பி )
 2. சீனி - 5 மே. கரண்டி ( நிரப்பி )
 3. உப்பு - அளவிற்கு
 4. தண்ணீர் - 4 தம்ளர்

செய்முறை :
 • ஒரு தம்ளர் தண்ணீரில் 4 மே. கரண்டி அறோட்டு மாவைக் கரைத்து வைத்துக் கொள்க 

 • மிகுதி 3 தம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து , நன்கு கொதித்த பின்பு இறக்கி இரண்டு நிமிடம் வைத்து அதனுள் கரைத்து வைத்துள்ள ஆரோட்டுமா கரைசலை ஊற்றி கட்டி படாமல் நன்கு கலக்கி பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .

 • கலவை ஓரளவு தடிக்கத் தொடங்கும் பொழுது சீனியையும் சேர்த்து நன்கு துளாவி காய்ச்சி இறக்கி ஓரளவு ஆறியபின் பரிமாறலாம் .

குறிப்பு :-

சுகதேகிகளுகாயின் தண்ணீருக்கு பதிலாக பாலை விட்டு காய்ச்சி கொள்ளலாம் .

அரிசி மா கூழ் ( ஆடிக்கூழ் )

 photo aadikool_zps7a77bbd0.jpg5- 6 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

 1. அரிசி - 1/2 சுண்டு
 2. வறுத்த பயறு - 100 கிராம்
 3. கற்கண்டு - 200 கிராம்
 4. தேங்காய் - 1
 5. உப்பு - அளவிற்கு
 6. தண்ணீர் - 14 தம்ளர்

செய்முறை :
 • அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .

 • ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .

 • பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .

 • பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .

 • பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க 

 • கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

ஊதுமாக் கூழ்

 photo oothumaakool_zps6b4f8410.jpg 


4- 6 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
 1. புளுங்கல் அரிசி - 1/2 சுண்டு
 2. நற்சீரகம் - 25 கிராம்
 3. மிளகு - 25 கிராம்
 4. மஞ்சள் - 1" நீள துண்டு
 5. கற்கண்டு - 250 கிராம்
 6. தேங்காய் - 1
 7. உப்பு - அளவிற்கு

செய்முறை :

 • அரிசியை கழுவி , மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதனுடன் மஞ்சள் , மிளகு , நற்சீரகம் என்பவற்றை சேர்த்து பசை போல அரைத்து எடுத்துக் கொள்க . ( தேவையாயின் சிறிதளவு நீர் சேர்த்து அரை க்குக )
 
 • தேங்காயை துருவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிழிந்து , 31/2 தம்ளர் பாலை எடுத்து வைத்துக் கொள்க .

 • கற்கண்டாய் ஓரளவு சிறுதுண்டுகளாக நொறுக்கி வைத்துக் கொள்க .


 • பின்பு தாய்ச்சியில் அரைத்த கூட்டையும் , கட்கன்டையும் போட்டு பாலையும் விட்டு கலக்கி கொண்டபின் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும் . கலவி கூழ் பதமாக தடிக்க தொடங்கியதும் அளவிற்கு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி சூடுடனேயே பரிமாறலாம் .