
4 - 5 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- மிளகு - 1 தே.க ( நிரப்பி )
- மல்லி - 2 மே . க ( நிரப்பி )
- நற்சீரகம் - 1 தே.க ( நிரப்பி )
- செத்தல் மிளகாய் - ஒன்று
- உள்ளி - 8 பல்லு
- பழப்புளி - ஒரு பாக்களவு ( விதை நீக்கியது)
- பெருங்காயம் - ஒரு குண்டு மணியளவு
- உப்பு - அளவுக்கு
- தண்ணீர் - 4 தம்ளர்
- தேங்காய் பூ - 3 மே. க ( நிரப்பி )
செய்முறை :
- தேங்காய் பூவில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பால் பிழிந்து கொள்க
- ஒரு தம்ளர் தண்ணீரில் பழப் புலியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- மல்லி , சீரகம் , மிளகாய் , உள்ளி என்பவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்தேடுத்துக் கொள்க .
- பின்பு இடித்த கலவையை பாத்திரத்திலிட்டு , தேங்காய் பால் பழ புலி கரைசல் 2 தம்ளர் தண்ணீர் என்பவற்றை விட்டு கரைத்து அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் . ரசம் பொங்கி கொதித்ததும் அப்பாத்திரத்தின் மூடியில் பெருங் காயத்தை உரைத்து அம மூடியால் பாத்திரத்தை நன்றாக மூடி சிறிது நேரம் வைத்து பின்பு இறக்கி கரண்டியால் நன்றாக கலக்கிகொண்ட பின்பு வடித்தெடுத்து பரிமாறலாம் .
0 comments:
Post a Comment