ஊதுமாக் கூழ்

 photo oothumaakool_zps6b4f8410.jpg 


4- 6 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
 1. புளுங்கல் அரிசி - 1/2 சுண்டு
 2. நற்சீரகம் - 25 கிராம்
 3. மிளகு - 25 கிராம்
 4. மஞ்சள் - 1" நீள துண்டு
 5. கற்கண்டு - 250 கிராம்
 6. தேங்காய் - 1
 7. உப்பு - அளவிற்கு

செய்முறை :

 • அரிசியை கழுவி , மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதனுடன் மஞ்சள் , மிளகு , நற்சீரகம் என்பவற்றை சேர்த்து பசை போல அரைத்து எடுத்துக் கொள்க . ( தேவையாயின் சிறிதளவு நீர் சேர்த்து அரை க்குக )
 
 • தேங்காயை துருவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிழிந்து , 31/2 தம்ளர் பாலை எடுத்து வைத்துக் கொள்க .

 • கற்கண்டாய் ஓரளவு சிறுதுண்டுகளாக நொறுக்கி வைத்துக் கொள்க .


 • பின்பு தாய்ச்சியில் அரைத்த கூட்டையும் , கட்கன்டையும் போட்டு பாலையும் விட்டு கலக்கி கொண்டபின் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும் . கலவி கூழ் பதமாக தடிக்க தொடங்கியதும் அளவிற்கு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி சூடுடனேயே பரிமாறலாம் .

0 comments:

Post a Comment