அறோட்டு மா கூழ்

 photo aroddumaakool_zps7cc085ba.jpg2 - 3 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

  1. அறோட்டுமா - 4 மே. கரண்டி ( நிரப்பி )
  2. சீனி - 5 மே. கரண்டி ( நிரப்பி )
  3. உப்பு - அளவிற்கு
  4. தண்ணீர் - 4 தம்ளர்

செய்முறை :
  • ஒரு தம்ளர் தண்ணீரில் 4 மே. கரண்டி அறோட்டு மாவைக் கரைத்து வைத்துக் கொள்க 

  • மிகுதி 3 தம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து , நன்கு கொதித்த பின்பு இறக்கி இரண்டு நிமிடம் வைத்து அதனுள் கரைத்து வைத்துள்ள ஆரோட்டுமா கரைசலை ஊற்றி கட்டி படாமல் நன்கு கலக்கி பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .

  • கலவை ஓரளவு தடிக்கத் தொடங்கும் பொழுது சீனியையும் சேர்த்து நன்கு துளாவி காய்ச்சி இறக்கி ஓரளவு ஆறியபின் பரிமாறலாம் .

குறிப்பு :-

சுகதேகிகளுகாயின் தண்ணீருக்கு பதிலாக பாலை விட்டு காய்ச்சி கொள்ளலாம் .

0 comments:

Post a Comment