
8 - 10 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- வெங்காயம் - 100 கிராம்
- கரட் - 100 கிராம்
- கோவா - 100 கிராம்
- லீட்ஸ் - 100 கிராம்
- தக்காளி - 100 கிராம்
- உருளை கிழங்கு - 100 கிராம்
- பருப்பு - 100 கிராம்
- கறிவேப்பிலை - 1 நெட்டு
- உள்ளி - 5 பல்லு
- மிளகு தூள் - அளவிற்கு
- உப்புத்த் தூள் - அளவிற்கு
- தேசிப் பழம் - 1
- தண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )
- சிக்கின் கியூப் - 2 கட்டி ( விரும்பினால் )
செய்முறை :
- மரக்கறி , உள்ளி வெங்காயம் என்பவற்றை துப்புரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க .
- பின்பு பாத்திரத்தில் 12 தம்ப்ளர் தண்ணீரை விட்டு வெட்டி வைத்துள்ள மரக்கறி வகைகள் , கறிவேப்பிலை , கழுவிய பருப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .
- மரக்கறி நன்றாக அவிந்த பின்பு சிக்கின் கியூப் . உப்பு என்பவற்றை அளவிற்கு சேர்த்து நன்றாக மசித்துக் கொண்ட பின்பு சூப்பை வடித்தெடுத்து மிளகு தூள் , தேசிப்புளி என்பவற்றை இட்டு கலந்து சூட்டுடனேயே பரிமாறலாம் .
0 comments:
Post a Comment