சான்ட்விச்

  sandvich_zps6756c231.jpg

சான்ட்விச்

                                                                                                                 15- 20 துண்டுகள் 


( கட்டுப் போசனத்திட்கு உகந்தது )


தேவையான பொருட்கள் :-


 1. பாண் - 1 இறாத்தல்
 2. கரட் - 100 கிராம்
 3. பீற்றூட் - 100 கிராம்
 4. உருளை கிழங்கு - 200 கிராம்
 5. உப்புத்தூள் - அளவிற்கு
 6. மிளகுதூள் - அளவிற்கு
 7. மாஜரீன் - 100 கிராம்
 8. பச்சை கலரிங் - 1 தேக்கரண்டி

செய்முறை :-
 • பானின் சுற்றிவர உள்ள கரைப்பகுதி யாவற்றையும் வெட்டி நீக்கிவிட்டு , நடுப்பகுதியை மட்டும் பன்னிரண்டு சம துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க . அல்லது சான்ட்விச் பானை பயன்படுத்தவும் .

 • பீற்றூட் , கரட் , உருளை கிழங்கு என்பவற்றை தோல் நீக்கித் துப்பரவாக்கி கழுவித் தனித் தனியாக அவித்தெடுத்து கொள்க .

 • பின்பு பீட்ரூட்டை தனியாக எடுத்து ஸ்க்றேப்பரில் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கி கொண்ட பின்பு அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு 

 • சேர்த்து வைத்துக்கொள்க .

 • அவ்வண்ணமே கரட்டையும் ஸ்க்றேப்பரில் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கி கொண்ட பின்பு அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு 

 • சேர்த்து வைத்துக்கொள்க .

 • உருளை கிழங்கை பிறிதொரு பாத்திரத்தில் மசித்து இடியப்ப உரலில் இட்டு பிழிந்தெடுத்து அதனுள்ளும்  ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு சேர்த்து வைத்துக்கொள்க .

 • பின்பு மிகுதியாகவுள்ள மஜாரினை பாண் துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும் பூசிக் கொள்க .

 • பின்பு மாஜரின் பூசிய ஆறு பாண் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு பாண் துண்டிட்கும் முதலில் பரவலாக உருளைக்கிழங்கு கலவையையும் . அதன்மேல் பரவலாக பீற்றூட் கலவையையும் , அதன் மேல் பரவலாக கரட் கலவையையும் பூசி பிறிதொரு பாண் துண்டினால் மூடி அழுத்திக் கொண்ட பின்பு 1 மணி நேரம் வரை குளிர் சாதன பெட்டியுள் வைத்து எடுத்து , ஒவ்வொரு பாண் துண்டையும் மூலைக்கு குறுக்காக வெட்டி இரண்டு முக்கோண துண்டுகளாக்கி கொண்டபின்பு பரிமாறலாம் .

குறிப்பு :-

சான்ட்விச் ப்ரட் டை வாங்கி மேலே கூறியதுபோல்
கலவைகளைப் படையாக பூசிகொண்டபின்  பாய் போல சுற்றி எடுத்து , ஓர் ஒயில் பேபரில் வைத்து  இறுகச் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து , பின்பு வில்லைகள் போல வெட்டி எடுத்து பரிமாறலாம் . இது PIN  Wheel  சான்ட்விச் எனப்படும் .

0 comments:

Post a Comment