பொம்பே ரோஸ்ட்


  bomberoast_zps5e5da615.jpg

 12 துண்டுகள் 

தேவையான பொருட்கள்

  1. பாண் - 1 இறாத்தல் ( 12 துண்டு )
  2. முட்டை - 2
  3. பால் - 11/2 போத்தல்
  4. வனிலா - 1 மே. க ( நிரப்பி )
  5. மாஜரின் ( தோசை கல்லுக்கு பூசுவதுக்கு )- 1 மே. க. ( நிரப்பி )

சீனிக்கு பதிலாக அளவாக மிளகு தூள் , உப்பு தூள் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் .

செய்முறை :-
  • பாணின்  நான்கு கரைகளையும்  வெட்டி நீக்கிவிட்டுப் பாணின்   உட் பகுதியை  மட்டும் 1/2" தடிப்பான 12 துண்டுகளாக வெட்டி வைத்து கொள்க 

  • பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு சீனியும் சேர்த்து அடித்துக் கொண்டபின் காய்ச்சி நன்கு ஆறிய  பாலை அடித்த முட்டையினில் விட்டு வனிலாவும் சேர்த்து அடித்துக் கொள்க .

  • பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் . சிறிதளவு மாஜரினைப் போட்டு உருகியதும் பரவலாக புரட்டிக் கொண்டபின் பாண் துண்டுகளை அடித்து வைத்துள்ள கலவையில் தோய்த்துதோசைகல்லில் போட்டு வாட்டி எடுத்தபின் பரிமாறலாம் .

குறிப்பு :-

ஒவ்வொரு தடவையும் பாண் வாட்டுவதட்கு முன்பு சிறிதளவு மாஜரினை போட்டு உருகிய பின்னரே பாணை  வாட்டுதல் வேண்டும்

0 comments:

Post a Comment

Flag Counter