உப்புமா

 uppumaa1_zps68dff86d.jpg


2-3 பேருக்கு போதுமானது .

தேவையான பொருட்கள் :-
  1. ரவ்வை - 250 கிராம்
  2. கரட் - 100 கிராம்
  3. லீட்ஸ் - 100 கிராம்
  4. உருளை கிழங்கு - 250 கிராம்
  5. சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மேசை கரண்டி ( நிரப்பி )
  6. மாஜரின் - 1 மேசை கரண்டி நிரப்பி அல்லது நல்லெண்ணெய் 3 மே .க.
  7. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 3 மேசை கரண்டி ( நிரப்பி )
  8. சிறிதாக வெட்டிய பச்சை/ செத்தல்  மிளகாய் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
  9. மிளகு தூள் - அளவிற்கு
  10. உப்பு தூள் - அளவிற்கு
  11. கொதி நீர் அல்லது ஒரு பாதி தேங்காயில் பிழிந்த பால் - 1- 11/2 தம்ளர் 

செய்முறை :-
  • ரவையை  அரித்து சிறிதாக வறுத்து எடுத்து  வைத்துக் கொள்க .

  • கரட் , லீட்ஸ் ஆகியவற்றை கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க .

  • உருளை கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்துக் கொள்க .

  • தாச்சியில்  ஒரு மேசை கரண்டி மஜரினை இட்டு உருகி கொதித்ததும் , அதனுள் வெட்டிய உருளை கிழங்கு , கரட் , லீட்ஸ் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை  வகைகளை போட்டு வதங்க விட்டு  உருளை கிழங்கு வதங்கியபின்   உப்பு . மிளகு தூள் போட்டு சேர்த்து பிரட்டி மூடி சிறிது நேரம் வதங்க விடவும் .

  • சிறிது நேரத்தில் இதனுள் வறுத்து வைத்துள்ள றவ்வையை கொட்டிக் கிளறி கொத்தி நீர் அல்லது தேங்காய் பால் 1 தம்ளர் விட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கிளறி , அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும் .

குறிப்பு :-
  • பிடித்தமானவர்கள் கடுகு 1 தே. கரண்டி , பெருஞ்சீரகம் 1 தே. கரண்டி சேர்த்து மரக்கறிகளுடன் வதங்க விடலாம் . வாசனையாக இருக்கும் .

  • உப்புமாவை பரி மாறும் போது விரும்பினால் 2 முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம் .   

  • அல்லது முட்டைகளை உப்பு சிறிதளவு மிளகாய் / மிளகு தூள் போட்டு வறுத்து சேர்த்து கொள்ளலாம் .

  • அலது மரக்கறி வகைகள் நன்கு வேகி வந்தவுடன் இரண்டு முட்டைகளை அதனுள் அடித்து ஊற்றி நன்கு கிளறி சேர்த்துக் கொண்ட பின்பு ரவ்வை கொட்டி கிளறிக் கொள்ளவும் .

  • அல்லது 20 - 25 இறால் வரை  பொரித்து  சேர்த்துக் கொள்ளலாம் .

0 comments:

Post a Comment

Flag Counter