இட்லி

 idli_zps9b36a3ac.jpg 


30 - 35 இட்லிகள் 

தேவையான பொருட்கள்

 1. உடைத்த உளுந்து - 250 கிராம்
 2. ரவை - 500 கிராம்
 3. உப்பு - அளவிற்கு
 4. பேக்கிங் பவுடர் - 1 தே . க . ( மட்டமாக )
 5. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே  . க . ( நிரப்பி )
 6. சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 1 தே . க .
 7. பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை
 8. கடுகு - 1 சிட்டிகை
 9. தேங்காய் எண்ணெய் - 2 மே. க .


செய்முறை :-

 • உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து கழுவிப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க .

 • ரவ்வையை அரித்து நீராவியில் அவித்து மீண்டும் அரித்து வைத்துக் கொள்க 

 • பின்பு அரைத்த உளுந்தை வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் இட்டு ர்வ்வயையும் இட்டு அளவாக தண்ணீர்விட்டு  இறுக்கமான கூழ் பதமாக கரைத்து 6 மணி நேரம் வரை  புலிக்க வைத்து கொள்க .

 • தாய்ச்சியில் எண்ணெய்  விட்டு  கொதிக்க விட்டு கடுகை போட்டு வெடிக்க வைத்து அதனுள் வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , பெருஞ்சீரகம் என்பவற்றை போட்டு தாளித்து எடுத்துக் கொள்க .

 • பின்பு புலிக்க வைத்துள்ள மா கலவையில் தாளித்ததையும் , பேக்கிங் பவுடரையும் அளவுக்கு உப்பும் இட்டு நன்கு அடித்துக் கரைத்துக் கொள்க .

 • பின்பு இட்லி சட்டியை அடுப்பில் வைத்து நீர் நன்கு கொதித்ததும் தட்டுக்களுக்கு மேல்  " லஞ்ச் " பேப்பரை விரித்துக் கொண்டு இட்லிகளை ஊற்றி அவித்தேடுத்துக் கொள்க .

 • இட்லிகளை பரிமாறும்போது சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம் .

0 comments:

Post a Comment