முட்டைத் தோசை

 egg-dosa_zps2514cd58.jpg

 


25- 30 தோசைகள்

தேவையான பொருட்கள் :-
 1. உடைத்த உழுந்து - 1 சுண்டு / 250 கிராம்
 2. பச்சை அரிசி -  2 சுண்டு
 3. வெந்தயம் - 1 தே . க . ( நிரப்பி )
 4. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
 5. உப்பு - அளவிற்கு
 6. மிளகு தூள் - அளவிற்கு
 7. முட்டை - 8 - 10
 8. நல்லெண்ணெய் / நெய் - 1/4 போத்தல் / ஒரு தம்ளர்
 9. அப்பச் சோட - 1 சிட்டிகை

தாளிதம்
 1. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே . க . ( நிரப்பி )
 2. சிரிதாக  வெட்டிய கறிவேப்பிலை - 1 தே . க . ( நிரப்பி )
 3. பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை
 4. கடுகு - 1 சிட்டிகை
 5. தேங்காய் எண்ணெய் - 2 மே . க .

செய்முறை :-
 • உளுந்தை துப்பரவாக்கி மூன்று மணி நேரம் ஊறவைத்து , தோல் நீக்கி  கழுவிக் களைந்து தேவைக்கு அளவாக நீர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்துக் கொள்க .

 • அரிசியை துப்பரவாக்கி கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து  இடித்து அரிக்குக. அரிக்கும்போது வரும் குறுணலை சுளகில் இட்டு கொழித்து 1/2 சுண்டு நடுத்தர அளவுடைய குறுணலை எடுத்து வைத்த பின்பு , முகுதி குருனலை இடித்து மாவை அரித்து எடுத்துக் கொள்க .

 • பின்பு இரண்டு தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு பொங்கி கொதித்ததும் , 1/ 2 சுண்டு குருனலை இட்டு நன்கு துழாவி  செர்த்துக்க் கொண்ட பின்பு  உடனே அடுப்பிலிருந்து இறக்கி  1/2 தம்ளர் குளிர்ந்த நீர் விட்டு நன்கு கல்கி கலவையை ஆறவைத்துக் கொள்க .

 • அரைத்து வைத்துள்ள உளுந்தினுள் ஆரிய குறுணல் கஞ்சியை ஊற்றி நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு , மாவையும் இட்டு சேர்த்துக் கரைக்குக . நீர்த்தன்மை காணாதுவிடின் தேவையான அளவு தண்ணீரை விட்டு கூழ் பதமாக கரைத்து 10- 12 மணி நேரம் வரை புளிக்கவைத்துக் கொள்க .

 • தாய்ச்சியில் எண்ணையை காயவைத்து கடுகை போட்டு வெடிக்க வைத்த பின்னர் அதனுள் வெங்காயம் , கரிவேப்பிலை , பெருஞ்சீரகம் என்பன இட்டு தாளித்து இறக்கி புலிக்க வைத்துள்ள தோசை மாவு கரைசலில் ஊற்றி 1 சிட்டிகை அப்பசோடாவும் உப்பும் அளவுக்கு இட்டு நன்றாக அடித்து கரைத்துக் கொள்க .

 • முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் விட்டு அளவுக்கு உப்பு , மிளகு தூள் என்பன சேர்த்து அடித்துக் கொள்க .

 • பின்பு தோசை கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி பரவலாக பிரட்டிகொண்டபின்பு கரைத்து வைத்துள்ள தோசை மா கரைசலை மேல்லிய தோசைகளாக வார்த்து அதன் மீ சிறிது  நெய்யை ஊற்றி சிறிது நேரம் வேகவிட்ட பின்பு , அதன்மேல் அடித்த முட்டையில் 2 மே. கரண்டியை  பரவலாக ஊற்றி தோசையை பாதியாக மடித்து  இருபுறமும் மாறி மாறி திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்துப் பரிமாறலாம் .

 • இவ்வண்ணமே தோசையை தயாரித்து உருளைக்கிழங்கு மசாலாக் கறியை வைத்து மடித்து மசாலாத்தோசை தயாரிக்கலாம் .

குறிப்பு :-

சாதாரண தோசை எனின் அரிசி மாவுக்கு பதிலாக மூன்று  சுண்டு அவித்த கோதுமை மாவை இட்டுக் குழைத்துக் கொள்ளலாம் . ஆனால் கஞ்சி காய்ச்சத் தேவை இல்லை .

0 comments:

Post a Comment