லவேரியா




  laveria_zpsaff57c3d.jpg


15 - 18 லவேரியா 

தேவையான பொருட்கள் :-

  1. வறுத்துக் குற்றி முற்றாக தோல் நீக்கிய பாசிபருப்பு - 1/2 சுண்டு
  2. தேங்காய் பூ - 1 1/2 சுண்டு
  3. மாவாக்கிய சர்க்கரை / கற்கண்டு - 1/2 சுண்டு
  4. ஏலப்பொடி - 1 தே . க . ( மட்டமாக )
  5. வறுத்த அரிசிமாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  6. உப்பு - அளவுக்கு
  7. தேங்காய் எண்ணெய் - 3 மே . க
  8. மஞ்சள் தூள் - அளவிற்கு

செய்முறை :-

  • பாசிப் பருப்பை முக்கல் பதத்திற்கு அவித்து வடித்தேடுத்துக் கொள்க . பின்பு அவ்வடித்த பருப்பினுள் தேங்காய் பூ , சர்க்கரை என்பவற்றை கொட்டிக் கலந்து அடுப்பில் வைத்து சர்க்கரை முற்றாக  கரையும்வரை கிளறி சர்கரைப் பாகு தடிக்கத் தொடங்கும்போது ஏலபொடி மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இறக்கி கொள்க .

  • அரிசிமாவை அரித்து பாத்திரத்தில் இட்டு அளவுக்கு உப்பும் 1 மே . க தேங்காய் எண்ணெயும் விட்டு விரல்களால் நன்றாக பிசிறி சேர்த்துக் கொண்ட பின்பு , நன்றாக பொங்கி கொதித்த நீரும் சிறிதளவு குளிர் நீரும் அளவிற்கு விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக அடித்துக் குலைத்துக் கொள்க  .

  • பின்பு குளித்த மாவை இடியப்ப உரலில் அடைத்து எண்ணெய் பூசிய வாழையிலை துண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழிந்து , அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள பாசிப் பருப்புக் கலவையில் ஒரு மேசை கரண்டியளவு  வைத்துக் கொண்டபின் இலையுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்திக் கொண்டபின்பு இடியப்பதட்டில் இரண்டிரண்டாக வைத்து ஆவியில் அவித்தெடுத்து ஆரிய பின்பு பரிமாறலாம்

குறிப்பு :-

  • வாழை இலைக்கு பதிலாக லஞ் பேப்பர் அல்லது சாதாரண பேபர் பாவிக்கலாம் 

  • லவேரியாக்கு கொடுக்கப்படுள்ள அளவுகளில் பொருட்கள் எடுத்து மோதகம் கொழுகட்டை தயாரித்துக் கொள்ளலாம் 
 
  • நன்றாக முருக வறுத்த அரிசி மாவையின் மோதகம் , கொழுகட்டை என்பவற்றின் மேட்பரப்புகள் வெடித்துக் கொள்ளுமாகையால் இவற்றிற்கு அரிசிமாவை ஓரளவாக வருக்க வேண்டும் .

  • ஏல பொடிக்கு பதிலாக அரைத் தேக கரண்டி மிளகு தூள் அரைத் தேக்கரண்டி சீரக மா  என்பவற்றை சேர்த்து பயன்படுத்தலாம் .

  • ஒரு சுண்டு அரிசி மாவில் 20 - 25 வரையான மோதகங்கள் தயாரித்துக் கொள்ளலாம் .

0 comments:

Post a Comment

Flag Counter