பிறஞ் பூரே

 franchpure_zpscb5e8a57.jpg2  பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :-


  1. உருளை கிழங்கு - 250 கிராம்
  2. பால் - 1 தம்ளர்
  3. சீஸ் - 25 கிராம்
  4. உப்பு - அளவுக்கு
  5. மிளகு தூள் - அளவிற்கு 


செய்முறை :-
  • உருளை கிழங்கை நன்றாக அவித்து சிறு துண்டுகளாக வெட்டி பாலும் சேர்த்து கிரைண்டேரில் இட்டு அடித்துக் கொள்க .

  • உருளை கிழங்கு கலைவையை  தாச்சியில் இட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி , அதனுடன் பட்டர் , சீஸ் , உப்பு தூள் , மிளகு தூள் சேர்த்துக் கலவையை நன்கு இறக்கித் திரளும் பதத்தை அடைந்ததும் இறங்கி கொள்க .


குறிப்பு :-

இதை பாண் , வாட்டிய இறைச்சி , நீராவியில் அவித்த மரக்கறி என்பவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம் .

0 comments:

Post a Comment