பால் அப்பம்

  appam_zpsf31c3f6b.jpg


20 - 25 அப்பம் 

தேவையான பொருட்கள் :-
  1. பச்சை அரிசி - 1 சுண்டு 
  2. தேங்காய் - 1
  3. அவித்த கோதுமை - 1/2 சுண்டு
  4. உப்பு - அளவிற்கு
  5. அப்பச்சோடா / ஈஸ்ட் - சிட்டிகை

செய்முறை :-
  • அரிசியை கழுவி களைந்து 6 மணி நேரம் ஊறவைத்தெடுத்து  முதலாம் தரம் இடித்து அரித்து வரும் குருணலில்  1/4 சுண்டு நடுத்தர குருனலை எடுத்து வேறாக வைத்துவிட்டு மிகுதிக் குருணல் முழுவதையும் இடித்தரித்து மாவை எடுத்துக் கொள்க .

  • குருனலை பாத்திரத்தில் இட்டு நன்றாக பொங்கி கொதித்த 2 தம்ளர் கொத்தி நீரை ஊற்றி உடனடியாக நன்றாக கலக்கி 1/2 தம்ளர் குளிர் இரை சேர்த்து ( கட்டை கரையாமல் இருப்பதற்கு ) நன்றாக ஆறவைக்கவும் .

  • பின்பு மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு ஆரிய கஞ்சியை ஊற்றி அப்பச்சோடா, அளவிற்கு தண்ணீர்  என்பன சேர்த்து , நீர்த்தன்மையான கூழ்ப் பதமாக கரைத்து 12 மணி நேரம்வரை புளிக்க  வைத்து உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்க .

  • தேங்காய் துருவி 2 தம்ளர் தன்னேர் சிறிது சிறிதாகவிட்டு கெட்டியான பாலாகப் பிழிந்தெடுத்துக் கொள்க .

  • பின்பு எண்ணெய் பூசிய தாச்சியை அடுப்பில் வைத்து அப்பமாவை ஊற்றி ஒரு முறை சுற்றிக் கொண்டபின் 1 கரண்டி பாலைவிட்டு மூடி வேகவைத்தேடுக்க .

குறிப்பு :-
  • அப்பத்தின் கரைகள் நன்றாக முறுக விட்டு எடுக்க வேண்டும் 

  • விரும்பினால் இனிப்புக்கு சர்க்கரை , அல்லது சீனி சேர்த்து தேங்காய் பாலுடன் கலந்து பயன்படுத்தலாம் 

  • இறுதியாக மாக்கரைசல் மிஞ்சினால் அதற்குள் 1 முட்டை சீனி கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து ஒன்றாக கலந்து தாய்ச்ச்சியுள் ஊற்றி மூடி வட்டிலப்பமாக எடுத்து சாப்டலாம் .

  • தேங்காய் பாலுக்கு சிறிது ஏலக்காய்  பவுடரை சேர்த்து பாவித்தல் வாசனையாகவும் , மிதமான சுவையையும் கொடுக்கும் .

0 comments:

Post a Comment

Flag Counter