பான் கேக்

 pan_cakes1_zpse450e8db.jpg8 பான் கேக் 

தேவையான பொருட்கள் :-
 1. கோதுமை மாவு - 250 கிராம்
 2. மஞ்சள் தூள் - அளவிற்கு
 3. தேங்காய் பூ - 16 மே. க ( நிரப்பி )
 4. ஏலப்பொடி - 1 தே . க . ( மட்டமாக )
 5. சீனி - 4 மே . க ( நிரப்பி )
 6. அப்ப சோடா - 1 சிட்டிகை 
 7. உப்பு - அளவுக்கு
 8. தேங்காய் எண்ணெய் - 2 மே . க ( தோசை கல்லுக்கு பூசுவதற்கு  )செய்முறை :-

 • தேங்காய் துருவலை பாத்திரத்திலிட்டு அளவிற்கு மஞ்சள் தூளும் சீனியும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்க .

 • கோதுமை மாவுடன் அப்பச்சோடா , மஞ்சள் தூள் என்பவற்றை கலந்தரித்து பாத்திரத்திலிட்டு அளவிற்கு உப்பும் தண்ணீரும் விட்டு  தோசை மா பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்க .

 • பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் , ஓர் துணியில் எண்ணெய்யை நனைத்து தோசைகல் முழுவதும் பரவலாக புரட்டிக் கொண்டபின்பு  கரைத்து வைத்துள்ள மா கரைசலை மிக மெல்லிய தோசையாக வார்த்து , மாக் கரைசலின் ஈரத்தன்ம மாறத்தொடங்கியதும் தயாரித்து வைத்துள்ள தேங்காய் பூ கலவையில் இரண்டு மேசை கரண்டி அளவை தோசையின் நடுவே வைத்து வட்டத்த் தோசையின் இரண்டு கரைப் பகுதிகளையும் வைத்தா தேங்காய் பூவை மூடும் வண்ணம் ஒன்றன்மேல் ஒன்றாக மடித்து நன்றாக தட்டை வடிவ கரண்டியால் அமர்த்திக் கொண்ட பின்பு மறுபுறம் திரும்பி போட்டு  வேகவிட்டு எடுத்து ஓரளவு சூட்டுடனேயே பரிமாறலாம் .

 • இவ்வண்ணம் மற்றைய பான் கேக்குளையும் தயாரித்துக் கொள்க .

குறிப்பு :-

தேங்காய் பூ கலவைக்கு பதிலாக உருளைக்கிழங்கு புரட்டல் இவ்வண்ணம் தயாரித்து இவ்வண்ணம் தயாரித்துக் கொள்ளலாம் . இது கரி ரொட்டி எனப்படும் . 500 கிராம் கிழங்கில் கரி தயாரிக்க வேண்டும் .

0 comments:

Post a Comment