மசாலாத் தூள் ( இறைச்சித் தூள் )


  iraichisarakkuthool_zpsc8471551.jpg

 1/2 ஜாம் போத்தல் அளவு 
 
தேவையான பொருட்கள்

 1. சாதிக்காய் - 1
 2. கறுவா - 2 பிடி
 3. கராம்பு - 3 மே. க . ( நிரப்பி ) / 2 பிடி
 4. ஏலக்காய் - 2 மே . க ( நிரப்பி ) / 1 பிடி
 5. வசுவாதி பூ - 8 பூக்கள்
 6. பூரான் கிழங்கு - 25
 7. பெருஞ்சீரகம் - 50 கிராம் / 10 மே . க . ( நிரப்பி )
 8. கறிவேப்பிலை - 5 நெட்டு

செய்முறை :-


 • பெருஞ்சீரகத்தை துப்பரவாக்கி கழுவி காயவைத்து எடுத்துக் கொள்க 

 • சாதிகாயின் கோதை உடைத்து அகற்றிவிட்டு  சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க 

 • பின்பு தைச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் , மேற்கூறிய பொருட்கள் யாவற்றையும் இட்டு இடைவிடாது வறுக்கவும் .

 • கறிவேப்பிலை நன்றாக வறுபட்ட ( நொறுங்கும் ) பதத்தில் இறக்கி இடித்து அரித்து போத்தலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம் . 

0 comments:

Post a Comment