கோப்பித் தூள்

 koppithool_zpsa7a5fc72.jpg


 


2 ஜாம் போத்தல் அளவு

தேவையான பொருட்கள்


  1. கோப்பி - 250 கிராம்
  2. மல்லி -  250 கிராம்
  3. வேர்க் கொம்பு - 100 கிராம்
  4. சின்ன சீரகம் - 25 கிராம்
  5. சீனி - 1 மே . க 

செய்முறை :-
  • கோப்பியை  தனியாக தாய்ச்சியில் இட்டு  ஓரளவு கருமை நிறம் வரும்வரை வறுத்து , இறக்கும் நேரத்தில்  சீனியும் சேர்த்து வறுத்து இறக்குக .

  • மல்லியை துப்பரவாக கழுவி காய வைத்து ஓரளவு கருமை நிறம் வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்க 

  • வேர்க்கொம்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பொன் நிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்க 

  • சின்ன சீரகத்தை துப்பரவாக்கி நன்றாக சூடாகும் வரை வறுத்தெடுத்துக் கொள்க 

  • பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரிதேடுத்து அரித்து போத்தலில் அடைத்து வைத்து பாவிக்கலாம் .

0 comments:

Post a Comment