உளுத்தம் பிட்டு

 uluththampiddu_zpsae3e3869.jpg2 பேருக்கு 

தேவையான பொருட்கள் :-

  1. வறுத்த அரிசி மாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  2. உளுந்து மாவு - 1/4 சுண்டு
  3. உப்பு - அளவிற்கு
  4. தண்ணீர் - அளவிற்கு( நகச்சூடானது )


செய்முறை :-

  • அரிசி மாவு , உளுந்து மாவு என்பவற்றை , வாயகன்ற பாத்திரத்திலிட்டு உப்பு தூள் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து கொள்க .

  • பின்பு மாவினுள் நகசூடான தண்ணீரை அளவாக ஊற்றி குழைத்து , கொத்தி அவித்தெடுத்து சூட்டுடனே பரிமாறலாம் .

குறிப்பு :-
  • விரும்பினால் 2 மே. கரண்டி நல்லெண்ணெய் கொதிக்க வைத்து 3 மே. கரண்டி சிறிதாக வெட்டிய வெங்காயம் இட்டு பொன்னிறமாக வதங்கவிட்டு அதனுள் பிட்டை இட்டு நன்கு சேர்த்து இறங்கிக் கொள்க . இவ்வாறு செய்வதால் பிட்டு நீண்ட நேரத்திற்கு  காய்ந்து போகாமலிருக்கும் .

  • சிறிதாக வெட்டிய 2 மே. கரண்டி வெங்காயம் , 1 மே. கரரண்டி பச்சை மிளகாய் என்பவற்றை 4 மே. கரண்டி நல்லெண்ணெயில் வதங்கவிட்டு அதனுள் , 2முட்டையை உடைத்து விட்டு பின் அதனுள் உப்புத்தூள் , மிளகு தூள் என்பவற்றை அளவிற்கு இட்டு நன்றாக கிளறி முட்டை பொரிந்து வரும்போது புட்டையிட்டு சேர்த்து இறக்குக .

0 comments:

Post a Comment