பூரி

 poori_zpsf9fca89b.jpg 

20- 30 பூரிகள் 

தேவையான பொருட்கள்

 1. கோதுமை மாவு - 1/2 சுண்டு
 2. ஆட்டாமாவு - 1 சுண்டு ( நிரப்பி )
 3. மாஜரின் - 1 மே . க ( நிரப்பி )
 4. உப்பு - அளவுக்கு
 5. அப்பசோடா - 1 தே . க ( மட்டமாக )
 6. ஐஸ் தண்ணி - அளவிற்கு
 7. கோதுமை மாவு - 2 மே . க . ( நிரப்பி ) பலகைக்கு பூச
 8. தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல்

செய்முறை :-

 • கோதுமை மாவு , ஆட்டா மாவுடன் அப்பா சோடாவை கலந்து இரண்டு முறை அரித்துப் பத்திரத்தில் போட்டுக்கொண்டு , அளவிற்கு உப்பும் மாஜரினும் இட்டு பிசிறி சேர்த்துக் கொள்ளக .

 • பின்பு மாவினுள் அளவிற்கு ஐஸ் தண்ணீர் விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக பிசைந்து குழைத்து நான்கு மணி நேரத்திற்கு வைத்துக் கொள்க .

 • மாக்கலவையை ஓரளவான உருண்டைகளாக எடுத்து மா பூசிய பலகையில் வைத்து  உருளையால் 1/4" தடிப்பாக இருக்கும் வண்ணம் உருட்டி சுட்டுவிரல் அளவுள்ள வட்டங்களாக வரும் வண்ணம்  வெட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்க .

 • இப் பூரிகளை உருளை கிழங்கு மசாலாக் கறியுடன் பரிமாறலாம் .

0 comments:

Post a Comment