டுபாய் ரொட்டி

 dubairotti_zps205701a5.jpg


 8 ரொட்டிகள்

தேவையான பொருட்கள் :-

 1. கோதுமை மாவு - 250 கிராம்
 2. கரட் - 100 கிராம்
 3. லீட்ஸ் - 100 கிராம்
 4. உருளை கிழங்கு - 100 கிராம்
 5. கறிமிளகாய் - 100 கிராம்
 6. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
 7. சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
 8. மிளகாய் தூள் - அளவிற்கு
 9. உப்பு தூள் - அளவிற்கு
 10. மாஜரின் , அல்லது தேங்காய் எண்ணெய் - 2 மேசை கரண்டி
 11. முட்டை 
             

செய்முறை :-
 • கரட் , லீட்ஸ், உருளை கிழங்கு , கறிமிளகாய்  ஆகியவற்றை கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க .

 • கோதுமை மாவை அரித்து வைத்துக் கொள்க .

 • முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து விட்டு நன்றாக அடித்துக் கொள்க .

 • தாச்சியில்  ஒரு மேசை கரண்டி மாஜரினை இட்டு உருகி கொதித்ததும் , அதனுள் வெட்டிய மரக்கறி வகைகளை போட்டு அரைப் பதமாக வதங்க விட்டு வதங்கியபின் அதனுள்  வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து போட்டு மூடி வதங்க விடவும் .

 • மரக்கறி வகைகள் வதங்கியவுடன்  உப்பு . மிளகு தூள் போட்டு சேர்த்து இறக்கி கொள்க .

 • பின்பு அரித்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு ,வதங்கிய மரக்கறிகளையும் அதனுள் போட்டு சேர்த்துக் கொண்டபின் , அடித்து வைத்துள்ள முட்டையை , சிறிது சிறிதாக  ஊற்றி  நன்கு பிசைந்து , தண்ணீரும் அளவிற்கு விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைத்து எடுத்து எட்டு சம அளவான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்க .

 • பின்பு தோசை கல்லில் சிறிதளவு மாஜரினை இட்டு பாரவிகொண்டபின் , ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து ஒரு அப்பமளவு வட்டமாக தட்டி கல்லில் இட்டு இரு புறமும் திருப்பி வேகவிட்டு எடுத்துக் கொள்க .

 • ஒவொரு முறையும் ரொட்டி வேக வைக்க முன் என்னை அலது மாஜரின் தடவிக் கொள்க .

குறிப்பு :-

 • இதற்க்கு முட்டை சேர்க்காமல் தண்ணீரை அளவிற்கு விட்டும் குழைத்துக் கொள்ளலாம் .

 • நோயாளிகளுக்கு மரக்கறிகளை அவித்து பாவிப்பது சிறந்தது .

 • தேங்காய் சம்பல் , சீனி சம்பல் இவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம் .

0 comments:

Post a Comment