
4 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- பார்லி - 2 மே . க ( நிரப்பி )
- உப்பு - அளவிற்கு
- தண்ணீர் - 5 தம்ப்ளர்
செய்முறை :
- பார்லியை கழுவி வைத்துப் பாத்திரத்தில் போட்டு முக்கால் மணி நேரம் ஊறவிட்டு மீண்டும் தண்ணீரை வடித்துவிட்டு பார்லியை தாய்ச்சியில் போட்டு 5 தம்ளர் தண்ணீரை விட்டு வேகவிடவும் .
- பார்லி கஞ்சி வேகும்போது நீர் மெல்லிய றோஸ் நிறத்தை அடையும் பருவத்தில் இறக்கி வடித்து அளவிற்கு உப்பு சேர்த்துக் கலக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .
குறிப்பு :
- உப்புக்கு பதிலாக தேசிப்புளியும் சீனியும் விருப்பதிற்கு ஏற்றவாறு சேர்த்து பரிமாறலாம்
- பார்லிக்கு பதிலாக சவ்வரிசியை பாவித்து இவ்வனமே கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம் .
- சவ்வரிசியாயின் மெல்லிய சாம்பல் நிறத்தை அடையும்போது இறக்கி வடிக்கவும்
0 comments:
Post a Comment