அவியல் கஞ்சி

 photo aviyalkanji_zps7659d25b.jpg
 

3 - 4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள்  : -

  1. புழுங்கல் அரிசி - 1 சுண்டு
  2. தேங்காய் - பாதி
  3. பச்சை மிளகாய் - 15
  4. வெங்காயம் - 15
  5. கறிவேப்பிலை - 2 நெட்டு
  6. தண்ணீர் - 31/2 போத்தல்
  7. மஞ்சள் தூள் - 2
  8. தேசிப் பழம் - 2
  9. உப்பு  - அளவிற்கு

செய்முறை :-
  • தேங்காயை துருவி இரண்டு தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்க .

  • வெங்காயம் மிளகாயை துப்பரவாக்கி ஈர்க்கில் மாறி மாறி கோர்த்து வைத்துக் கொள்க 

  • பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்கவைத்து பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி அரைப்பதமாக அவிந்தவுடன் , வெங்காயம் , மிளகாய் கோர்த்து வைத்துள்ள ஏற்க்கையும் கறிவேப்பிலை நெட்டையுமிட்டு  மூடி அவிய விடவும் .

  • அரிசி நன்றாக அவிந்ததும் , ஈர்க்கில் கோர்த்து வைத்துள்ள வெங்காயம் , மிளகாயை எடுத்து ஈர்க்கை நீவிவிட்டு பிறிதொரு பாத்திரத்தில் இட்டு நன்றாக மசித்துகொண்ட பின்பு அக்கலவையை அவிந்துகொண்டிருக்கும் அரிசியில் விட்டு தேங்காய் பால் அளவிற்கு உப்பு மஞ்சள் தூள் என்பவற்றையும் சேர்த்து நன்றாக துழாவி காய்ச்சி இறக்கி கறிவேப்பிலை நெட்டை நீக்கிய பின்பு , தேசிப்புளி விட்டுச் சேர்த்து சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

0 comments:

Post a Comment

Flag Counter