skip to main |
skip to sidebar
- பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
-
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து
மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.
-
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
-
சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
-
தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்
-
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து
வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
-
கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
-
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
-
தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
-
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து,
கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

-
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு
இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி
நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு
பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர்
செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
- குடைமிளகாய்
ஸ்டஃப்பிங் செய்யும்போது அது முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும்
எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாகக்
காணப்படும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்
- நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும். ஸ்பைசியாகவும் காணப்படும்.
- எப்போதும்
ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம்
வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து
பாருங்கள். வாசனையும், சுவையும் இது என்ன புதுக் குழம்பு என்று
கேட்பார்கள்.
- எப்போதும்
வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில்
அலம்பிவிட்டு நறுக்குங்கள். ஆக்ஸிடைஸ் ஆவதால் நிகழும் அழுகை குறையும்.
- அரோக்கியத்திற்கு,
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில்
கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
-
காலையில், இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி
சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு
சாப்பிடத் தோன்றும்.
- தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில்
காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது
பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும்
ஒரே வடிவமாக காணப்படும்.
- பூரி சுட்ட சிறிது நேரத்திலேய நமத்து
போய் தோசையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்றால், பூரிக்கு மாவு
பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக
நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
- பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல்
வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ்,
சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட்
பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- சுவையான,
மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில்
கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.
- பரோட்டா செய்யும் போது கவனிக்க வேண்டியவை
- வீட்டில் எப்போதாவது பரோட்டா செய்தீர்கள் என்றால் சில குளறுபடிகளையும் செய்துவிடுவோம்.
- அதை தவிர்க்க சில யோசனைகள்
- பரோட்டாவிற்கு
உள்ளே மசாலா வைத்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும்
என்பது உங்களுக்குத் தெரியும். இல்லை என்றால் பரோட்டா ஊறி பொத பொத
என்று ஆகிவிடும்.
- முள்ளங்கி வைத்து பரோட்டா செய்தால்,
முள்ளங்கியில் அதிக நீர் இருக்கும், அதனை தனியாக
எடுத்துவிடவும். அதன் தண்ணீரை வீணாக்காமல் அதிலேயே பரோட்டாவிற்கு
மாவு பிசையலாம்.
- தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய
கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால்,
பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலுக்கும் நல்லது.
- இது வட
இந்தியர்கள் அதிகமாக செய்யும் சமையல் முறையாகும். எதையும் நாம்
தனியாக ஒதுக்காமல், எல்லாவற்றையும் செய்து பார்ப்போம். சரியாக
வரும்வரை அதை விடுவதில்லை என்று முடிவெடுப்போம்.
முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே ....
1.
பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.
2.
காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
3.
தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.
4.
எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
5.
மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.
6.
பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
7.
பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
8.
முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
9.
ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
10.
வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.
11.
உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.
12.
வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.
13.
பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
14.
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
15.
முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்
- சமையலுக்கு
உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை பல பேருக்குத்
தெரிஞ்சும் இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்குத் தெரியாத
டிப்ஸை தெரிஞ்சுகொள்ளுங்கள்
- * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
- * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப்
போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி,
அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில்
பொரித்தால் நன்றாகப் பொரியும்
- * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க
நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து
அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
- * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை
இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்
பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும்,
சுவையாகவும் இருக்கும்.
- * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு
50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து
மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை
ரெடி.
- * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால்,
அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக்
கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5
நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று
புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
- * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால்
சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட
நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
- * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக்
கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும்.
அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள்
விலகிவிடும்.
- * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு
டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து
விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி
பிடித்துவிடுவார்கள்.
- * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன்
போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை
மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து
மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை
சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு
போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
- * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது
அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள்.
இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத்
தேய்க்கலாம
- * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்
- * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்
- * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங்
ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை
உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
- * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
- * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
- * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
- * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்க
- * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன்
சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன்
ருசியும் அபாரமாக இருக்கும்.
- * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
- * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு
மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை
மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- * ஒரு பாத்திரத்தில் தண்ர்
எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில்
முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய
முட்டை.
- * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க
இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை
குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
- * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை
வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட
நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
- * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
- * தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
- * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
-
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக்
கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு
அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.