Showing posts with label விசேட காலை உணவுகள். Show all posts
Showing posts with label விசேட காலை உணவுகள். Show all posts

அலப்ப

 HalapaRecipe_zps3467ece3.jpg 




20 - 30 அலப்ப 

தேவையான பொருட்கள்
  1. குரக்கன் மா - 1 கிலோகிராம்
  2. தேங்காய் - 1
  3. கித்துள் - 1/4 கிலோகிராம்
  4. உப்பு - அளவிற்கு
  5. தண்ணீர் - அளவிற்கு
  6. குருத்து வாழை இல்லை துண்டு - 20 - 30


செய்முறை :-
  • கித்துளை தூளாக இடித்து வைத்துக் கொள்க .

  • தேங்காயை துருவிக் கொள்க .

  • குரக்கன் மாவை அரித்துப் பாத்திரத்திலிட்டு தேங்காய் பூ , கித்துள் , உப்பு என்பவற்றை இட்டு நன்கு கலந்துகொண்ட பின்பு அளவிற்கு தண்ணீர்விட்டு ரொட்டி மாப்பததிட்கு  குழைத்து தேசிபழம் அளவிற்கு உருண்ட்டைகளாக உருட்டி சதுர வடிவான வாழையிலையில் வைத்து மெலிதாக தட்டி இலையுடன் சேர்த்துப் பாதியாக மடித்து நீராவியில் அவித்து எடுக்குக .

சமபோஷ ரொட்டி

 samaposaroti_zps13c91549.jpg

 


10  - 12 ரொட்டி

தேவையான பொருட்கள்
  • சமபோஷ மாவு - 200 கிராம்
  • சிறிதாக வெட்டப்பட்ட  வெங்காயம் - 2 மே. க
  • சிறிதாக வெட்டப்பட்ட பச்சைமிளகாய் -  1 மே. க
  • தேங்காய் பூ - 3 மே. க
  • முருங்கை இல்லை - 8 மே. க
  • தே. எ / மஜரீன் - 2 மே. க  ( மட்டமாக )
  • பால் - 1/2 தம்ளர்
  • கரட் - 100 கிராம்
  • உப்பு தூள் - அளவிற்கு
  • மிளகு தூள் - அளவிற்கு

செய்முறை :-
  • முருங்கை இலைத் துப்புரவு செய்து கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுக .

  • கரட்டை துப்புரவு செய்து கழுவிச் ஸ்கிறேப்பரில் துருவிக் கொள்க .

  • தாய்ச்சியை  அடுப்பில் வைத்து 2 மேசை கரண்டி மாஜரீன் விட்டுக் கொதித்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம் , பச்சை மிளகாய் என்பவற்றை இட்டு வதந்கவைத்து வதங்கியதும் முருங்கை இல்லை , கரட் என்பவற்றை இட்டு சிறிது நேரம் வதங்கவிடவும் . இவை ஓரளவு வதங்கியதும் தேங்காய் பூ , மிளகு தூள் , உப்புத்தூள் என்பவற்றையிட்டு  நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு அடுப்பில் இருந்து இறங்கி கொள்க .

  • சமபோஷ மாவை அரித்துப் பாத்திரத்தில் இட்டு தாளித்த கலவையை அதனுள் கொட்டி பாலும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைத்து உருண்டைகளாக உருட்டி , ரொட்டிபோல் தட்டி எண்ணெய்யை பூசிய தோசை கல்லில் இட்டு 
  • வாட்டிக் கொள்க .

சோயா ரொட்டி

 soyaarotty1_zps0ad257e7.jpg



12- 15 ரொட்ட்டி 

தேவையான பொருட்கள் :-

  • சோயா மா - 1/2 சுண்டு
  • புலுங்கலரிசி மா - 1/4 சுண்டு
  • கடலை மா - 1/4 சுண்டு
  • கரட் - 100 கிராம்
  • லீட்ஸ் - 100 கிராம்
  • சி . வெ . பச்சை மிளகாய் - 2. மே. க
  • உப்பு தூள் - அளவிற்கு
  • மிளகு தூள் - அளவிற்கு
  • நெய் - 2 மே. க
  • தண்ணீர் - அளவிற்கு 

செய்முறை :-
  • கரட்டை துப்புரவு செய்து ஸ்கிறேபரில் துருவியெடுத்து கொள்க .

  • லீட்சை துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க 

  • சோயா மா , புழுங்கலரிசி மா , கடை மா  என்பவற்றை அரித்துப் பாத்திரத்திலிட்டு வெட்டிய கரட் , லீட்ஸ் , பச்சை மிளகாய் , உப்பு தூள் , மிளகு தூள் , நெய் என்பன இட்டு நன்கு கலந்துகொண்ட பின்பு , தண்ணீரை அளவிற்கு விட்டு ரொட்டி மாப்பததிட்கு குழைத்து பொலிதீன் காகிதத்தில் வைத்து ரோட்டிகளாக தட்டி எண்ணெய் பூசிய தோசைக் கல்லில் இட்டு வாட்டி எடுக்குக 

உளுத்தம் பிட்டு

 uluththampiddu_zpsae3e3869.jpg



2 பேருக்கு 

தேவையான பொருட்கள் :-

  1. வறுத்த அரிசி மாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  2. உளுந்து மாவு - 1/4 சுண்டு
  3. உப்பு - அளவிற்கு
  4. தண்ணீர் - அளவிற்கு( நகச்சூடானது )


செய்முறை :-

  • அரிசி மாவு , உளுந்து மாவு என்பவற்றை , வாயகன்ற பாத்திரத்திலிட்டு உப்பு தூள் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து கொள்க .

  • பின்பு மாவினுள் நகசூடான தண்ணீரை அளவாக ஊற்றி குழைத்து , கொத்தி அவித்தெடுத்து சூட்டுடனே பரிமாறலாம் .

குறிப்பு :-
  • விரும்பினால் 2 மே. கரண்டி நல்லெண்ணெய் கொதிக்க வைத்து 3 மே. கரண்டி சிறிதாக வெட்டிய வெங்காயம் இட்டு பொன்னிறமாக வதங்கவிட்டு அதனுள் பிட்டை இட்டு நன்கு சேர்த்து இறங்கிக் கொள்க . இவ்வாறு செய்வதால் பிட்டு நீண்ட நேரத்திற்கு  காய்ந்து போகாமலிருக்கும் .

  • சிறிதாக வெட்டிய 2 மே. கரண்டி வெங்காயம் , 1 மே. கரரண்டி பச்சை மிளகாய் என்பவற்றை 4 மே. கரண்டி நல்லெண்ணெயில் வதங்கவிட்டு அதனுள் , 2முட்டையை உடைத்து விட்டு பின் அதனுள் உப்புத்தூள் , மிளகு தூள் என்பவற்றை அளவிற்கு இட்டு நன்றாக கிளறி முட்டை பொரிந்து வரும்போது புட்டையிட்டு சேர்த்து இறக்குக .

பால் அப்பம்

  appam_zpsf31c3f6b.jpg


20 - 25 அப்பம் 

தேவையான பொருட்கள் :-
  1. பச்சை அரிசி - 1 சுண்டு 
  2. தேங்காய் - 1
  3. அவித்த கோதுமை - 1/2 சுண்டு
  4. உப்பு - அளவிற்கு
  5. அப்பச்சோடா / ஈஸ்ட் - சிட்டிகை

செய்முறை :-
  • அரிசியை கழுவி களைந்து 6 மணி நேரம் ஊறவைத்தெடுத்து  முதலாம் தரம் இடித்து அரித்து வரும் குருணலில்  1/4 சுண்டு நடுத்தர குருனலை எடுத்து வேறாக வைத்துவிட்டு மிகுதிக் குருணல் முழுவதையும் இடித்தரித்து மாவை எடுத்துக் கொள்க .

  • குருனலை பாத்திரத்தில் இட்டு நன்றாக பொங்கி கொதித்த 2 தம்ளர் கொத்தி நீரை ஊற்றி உடனடியாக நன்றாக கலக்கி 1/2 தம்ளர் குளிர் இரை சேர்த்து ( கட்டை கரையாமல் இருப்பதற்கு ) நன்றாக ஆறவைக்கவும் .

  • பின்பு மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு ஆரிய கஞ்சியை ஊற்றி அப்பச்சோடா, அளவிற்கு தண்ணீர்  என்பன சேர்த்து , நீர்த்தன்மையான கூழ்ப் பதமாக கரைத்து 12 மணி நேரம்வரை புளிக்க  வைத்து உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்க .

  • தேங்காய் துருவி 2 தம்ளர் தன்னேர் சிறிது சிறிதாகவிட்டு கெட்டியான பாலாகப் பிழிந்தெடுத்துக் கொள்க .

  • பின்பு எண்ணெய் பூசிய தாச்சியை அடுப்பில் வைத்து அப்பமாவை ஊற்றி ஒரு முறை சுற்றிக் கொண்டபின் 1 கரண்டி பாலைவிட்டு மூடி வேகவைத்தேடுக்க .

குறிப்பு :-
  • அப்பத்தின் கரைகள் நன்றாக முறுக விட்டு எடுக்க வேண்டும் 

  • விரும்பினால் இனிப்புக்கு சர்க்கரை , அல்லது சீனி சேர்த்து தேங்காய் பாலுடன் கலந்து பயன்படுத்தலாம் 

  • இறுதியாக மாக்கரைசல் மிஞ்சினால் அதற்குள் 1 முட்டை சீனி கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து ஒன்றாக கலந்து தாய்ச்ச்சியுள் ஊற்றி மூடி வட்டிலப்பமாக எடுத்து சாப்டலாம் .

  • தேங்காய் பாலுக்கு சிறிது ஏலக்காய்  பவுடரை சேர்த்து பாவித்தல் வாசனையாகவும் , மிதமான சுவையையும் கொடுக்கும் .

பிறஞ் பூரே

 franchpure_zpscb5e8a57.jpg



2  பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :-


  1. உருளை கிழங்கு - 250 கிராம்
  2. பால் - 1 தம்ளர்
  3. சீஸ் - 25 கிராம்
  4. உப்பு - அளவுக்கு
  5. மிளகு தூள் - அளவிற்கு 


செய்முறை :-
  • உருளை கிழங்கை நன்றாக அவித்து சிறு துண்டுகளாக வெட்டி பாலும் சேர்த்து கிரைண்டேரில் இட்டு அடித்துக் கொள்க .

  • உருளை கிழங்கு கலைவையை  தாச்சியில் இட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி , அதனுடன் பட்டர் , சீஸ் , உப்பு தூள் , மிளகு தூள் சேர்த்துக் கலவையை நன்கு இறக்கித் திரளும் பதத்தை அடைந்ததும் இறங்கி கொள்க .


குறிப்பு :-

இதை பாண் , வாட்டிய இறைச்சி , நீராவியில் அவித்த மரக்கறி என்பவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம் .

பான் கேக்

 pan_cakes1_zpse450e8db.jpg



8 பான் கேக் 

தேவையான பொருட்கள் :-
  1. கோதுமை மாவு - 250 கிராம்
  2. மஞ்சள் தூள் - அளவிற்கு
  3. தேங்காய் பூ - 16 மே. க ( நிரப்பி )
  4. ஏலப்பொடி - 1 தே . க . ( மட்டமாக )
  5. சீனி - 4 மே . க ( நிரப்பி )
  6. அப்ப சோடா - 1 சிட்டிகை 
  7. உப்பு - அளவுக்கு
  8. தேங்காய் எண்ணெய் - 2 மே . க ( தோசை கல்லுக்கு பூசுவதற்கு  )



செய்முறை :-

  • தேங்காய் துருவலை பாத்திரத்திலிட்டு அளவிற்கு மஞ்சள் தூளும் சீனியும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்க .

  • கோதுமை மாவுடன் அப்பச்சோடா , மஞ்சள் தூள் என்பவற்றை கலந்தரித்து பாத்திரத்திலிட்டு அளவிற்கு உப்பும் தண்ணீரும் விட்டு  தோசை மா பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்க .

  • பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் , ஓர் துணியில் எண்ணெய்யை நனைத்து தோசைகல் முழுவதும் பரவலாக புரட்டிக் கொண்டபின்பு  கரைத்து வைத்துள்ள மா கரைசலை மிக மெல்லிய தோசையாக வார்த்து , மாக் கரைசலின் ஈரத்தன்ம மாறத்தொடங்கியதும் தயாரித்து வைத்துள்ள தேங்காய் பூ கலவையில் இரண்டு மேசை கரண்டி அளவை தோசையின் நடுவே வைத்து வட்டத்த் தோசையின் இரண்டு கரைப் பகுதிகளையும் வைத்தா தேங்காய் பூவை மூடும் வண்ணம் ஒன்றன்மேல் ஒன்றாக மடித்து நன்றாக தட்டை வடிவ கரண்டியால் அமர்த்திக் கொண்ட பின்பு மறுபுறம் திரும்பி போட்டு  வேகவிட்டு எடுத்து ஓரளவு சூட்டுடனேயே பரிமாறலாம் .

  • இவ்வண்ணம் மற்றைய பான் கேக்குளையும் தயாரித்துக் கொள்க .

குறிப்பு :-

தேங்காய் பூ கலவைக்கு பதிலாக உருளைக்கிழங்கு புரட்டல் இவ்வண்ணம் தயாரித்து இவ்வண்ணம் தயாரித்துக் கொள்ளலாம் . இது கரி ரொட்டி எனப்படும் . 500 கிராம் கிழங்கில் கரி தயாரிக்க வேண்டும் .

லவேரியா




  laveria_zpsaff57c3d.jpg


15 - 18 லவேரியா 

தேவையான பொருட்கள் :-

  1. வறுத்துக் குற்றி முற்றாக தோல் நீக்கிய பாசிபருப்பு - 1/2 சுண்டு
  2. தேங்காய் பூ - 1 1/2 சுண்டு
  3. மாவாக்கிய சர்க்கரை / கற்கண்டு - 1/2 சுண்டு
  4. ஏலப்பொடி - 1 தே . க . ( மட்டமாக )
  5. வறுத்த அரிசிமாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  6. உப்பு - அளவுக்கு
  7. தேங்காய் எண்ணெய் - 3 மே . க
  8. மஞ்சள் தூள் - அளவிற்கு

செய்முறை :-

  • பாசிப் பருப்பை முக்கல் பதத்திற்கு அவித்து வடித்தேடுத்துக் கொள்க . பின்பு அவ்வடித்த பருப்பினுள் தேங்காய் பூ , சர்க்கரை என்பவற்றை கொட்டிக் கலந்து அடுப்பில் வைத்து சர்க்கரை முற்றாக  கரையும்வரை கிளறி சர்கரைப் பாகு தடிக்கத் தொடங்கும்போது ஏலபொடி மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இறக்கி கொள்க .

  • அரிசிமாவை அரித்து பாத்திரத்தில் இட்டு அளவுக்கு உப்பும் 1 மே . க தேங்காய் எண்ணெயும் விட்டு விரல்களால் நன்றாக பிசிறி சேர்த்துக் கொண்ட பின்பு , நன்றாக பொங்கி கொதித்த நீரும் சிறிதளவு குளிர் நீரும் அளவிற்கு விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக அடித்துக் குலைத்துக் கொள்க  .

  • பின்பு குளித்த மாவை இடியப்ப உரலில் அடைத்து எண்ணெய் பூசிய வாழையிலை துண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழிந்து , அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள பாசிப் பருப்புக் கலவையில் ஒரு மேசை கரண்டியளவு  வைத்துக் கொண்டபின் இலையுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்திக் கொண்டபின்பு இடியப்பதட்டில் இரண்டிரண்டாக வைத்து ஆவியில் அவித்தெடுத்து ஆரிய பின்பு பரிமாறலாம்

குறிப்பு :-

  • வாழை இலைக்கு பதிலாக லஞ் பேப்பர் அல்லது சாதாரண பேபர் பாவிக்கலாம் 

  • லவேரியாக்கு கொடுக்கப்படுள்ள அளவுகளில் பொருட்கள் எடுத்து மோதகம் கொழுகட்டை தயாரித்துக் கொள்ளலாம் 
 
  • நன்றாக முருக வறுத்த அரிசி மாவையின் மோதகம் , கொழுகட்டை என்பவற்றின் மேட்பரப்புகள் வெடித்துக் கொள்ளுமாகையால் இவற்றிற்கு அரிசிமாவை ஓரளவாக வருக்க வேண்டும் .

  • ஏல பொடிக்கு பதிலாக அரைத் தேக கரண்டி மிளகு தூள் அரைத் தேக்கரண்டி சீரக மா  என்பவற்றை சேர்த்து பயன்படுத்தலாம் .

  • ஒரு சுண்டு அரிசி மாவில் 20 - 25 வரையான மோதகங்கள் தயாரித்துக் கொள்ளலாம் .

முட்டைத் தோசை

 egg-dosa_zps2514cd58.jpg

 


25- 30 தோசைகள்

தேவையான பொருட்கள் :-
  1. உடைத்த உழுந்து - 1 சுண்டு / 250 கிராம்
  2. பச்சை அரிசி -  2 சுண்டு
  3. வெந்தயம் - 1 தே . க . ( நிரப்பி )
  4. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
  5. உப்பு - அளவிற்கு
  6. மிளகு தூள் - அளவிற்கு
  7. முட்டை - 8 - 10
  8. நல்லெண்ணெய் / நெய் - 1/4 போத்தல் / ஒரு தம்ளர்
  9. அப்பச் சோட - 1 சிட்டிகை

தாளிதம்
  1. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே . க . ( நிரப்பி )
  2. சிரிதாக  வெட்டிய கறிவேப்பிலை - 1 தே . க . ( நிரப்பி )
  3. பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை
  4. கடுகு - 1 சிட்டிகை
  5. தேங்காய் எண்ணெய் - 2 மே . க .

செய்முறை :-
  • உளுந்தை துப்பரவாக்கி மூன்று மணி நேரம் ஊறவைத்து , தோல் நீக்கி  கழுவிக் களைந்து தேவைக்கு அளவாக நீர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்துக் கொள்க .

  • அரிசியை துப்பரவாக்கி கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து  இடித்து அரிக்குக. அரிக்கும்போது வரும் குறுணலை சுளகில் இட்டு கொழித்து 1/2 சுண்டு நடுத்தர அளவுடைய குறுணலை எடுத்து வைத்த பின்பு , முகுதி குருனலை இடித்து மாவை அரித்து எடுத்துக் கொள்க .

  • பின்பு இரண்டு தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு பொங்கி கொதித்ததும் , 1/ 2 சுண்டு குருனலை இட்டு நன்கு துழாவி  செர்த்துக்க் கொண்ட பின்பு  உடனே அடுப்பிலிருந்து இறக்கி  1/2 தம்ளர் குளிர்ந்த நீர் விட்டு நன்கு கல்கி கலவையை ஆறவைத்துக் கொள்க .

  • அரைத்து வைத்துள்ள உளுந்தினுள் ஆரிய குறுணல் கஞ்சியை ஊற்றி நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு , மாவையும் இட்டு சேர்த்துக் கரைக்குக . நீர்த்தன்மை காணாதுவிடின் தேவையான அளவு தண்ணீரை விட்டு கூழ் பதமாக கரைத்து 10- 12 மணி நேரம் வரை புளிக்கவைத்துக் கொள்க .

  • தாய்ச்சியில் எண்ணையை காயவைத்து கடுகை போட்டு வெடிக்க வைத்த பின்னர் அதனுள் வெங்காயம் , கரிவேப்பிலை , பெருஞ்சீரகம் என்பன இட்டு தாளித்து இறக்கி புலிக்க வைத்துள்ள தோசை மாவு கரைசலில் ஊற்றி 1 சிட்டிகை அப்பசோடாவும் உப்பும் அளவுக்கு இட்டு நன்றாக அடித்து கரைத்துக் கொள்க .

  • முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் விட்டு அளவுக்கு உப்பு , மிளகு தூள் என்பன சேர்த்து அடித்துக் கொள்க .

  • பின்பு தோசை கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி பரவலாக பிரட்டிகொண்டபின்பு கரைத்து வைத்துள்ள தோசை மா கரைசலை மேல்லிய தோசைகளாக வார்த்து அதன் மீ சிறிது  நெய்யை ஊற்றி சிறிது நேரம் வேகவிட்ட பின்பு , அதன்மேல் அடித்த முட்டையில் 2 மே. கரண்டியை  பரவலாக ஊற்றி தோசையை பாதியாக மடித்து  இருபுறமும் மாறி மாறி திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்துப் பரிமாறலாம் .

  • இவ்வண்ணமே தோசையை தயாரித்து உருளைக்கிழங்கு மசாலாக் கறியை வைத்து மடித்து மசாலாத்தோசை தயாரிக்கலாம் .

குறிப்பு :-

சாதாரண தோசை எனின் அரிசி மாவுக்கு பதிலாக மூன்று  சுண்டு அவித்த கோதுமை மாவை இட்டுக் குழைத்துக் கொள்ளலாம் . ஆனால் கஞ்சி காய்ச்சத் தேவை இல்லை .

சப்பாத்தி

  Chapati-Recipe_zpsde7a2bca.jpg

 


20- 30 சப்பாத்திகள் 

தேவையான பொருட்கள்
  1. கோதுமை மாவு - 1/2 சுண்டு
  2. ஆட்டாமாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  3. மாஜரின் - 1 மே . க ( நிரப்பி )
  4. உப்பு - அளவுக்கு
  5. அப்பசோடா - 1 தே . க ( மட்டமாக )
  6. ஐஸ் தண்ணி - அளவிற்கு
  7. கோதுமை மாவு - 2 மே . க . ( நிரப்பி ) பலகைக்கு பூச
  8. தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல்

செய்முறை :-
  • கோதுமை மாவு , ஆட்டா மாவுடன் அப்பா சோடாவை கலந்து இரண்டு முறை அரித்துப் பத்திரத்தில் போட்டுக்கொண்டு , அளவிற்கு உப்பும் மாஜரினும் இட்டு பிசிறி சேர்த்துக் கொள்ளக .

  • பின்பு மாவினுள் அளவிற்கு ஐஸ் தண்ணீர் விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக பிசைந்து குழைத்து நான்கு மணி நேரத்திற்கு வைத்துக் கொள்க .

  • மாக்கலவையை ஓரளவான உருண்டைகளாக எடுத்து மா பூசிய பலகையில் வைத்து  உருளையால் 1/4" தடிப்பாக இருக்கும் வண்ணம் உருட்டி சுட்டுவிரல் அளவுள்ள வட்டங்களாக வரும் வண்ணம்  வெட்டி எடுத்துக் கொள்க .

  • பின்பு துவாரமுள்ள மண் சட்டியை எடுத்து அத துவாரத்தின் மேல் கம்பி வலையை வைத்து அதன் மேல் செந்நிறமாக எரிந்துகொண்டிருக்கும் தணலை கொட்டி வட்டமாக வெட்டி எடுத்த மாவை தோசை கல்லில் இருபுறமும் ஓரளவாக வாட்டி எடுத்த சப்பாத்திகளை போட்டு அவை பொங்கி கொண்டபின்பு எடுத்துக் கொள்ளலாம் .


குறிப்பு :-

  • தணல் உள்ள சட்டியை எரியாத அடுப்போன்றில் தொக்கி வைத்துக்கொண்டால் தணல் நீண்ட நேரத்திற்க்கு கத கதப்பாக இருக்கும் .

  • ஆட்டா மாவுக்கு பதிலாக கோதுமை மாவை முழுமையாக பயன்படுத்தலாம் .

பூரி

 poori_zpsf9fca89b.jpg 

20- 30 பூரிகள் 

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு - 1/2 சுண்டு
  2. ஆட்டாமாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  3. மாஜரின் - 1 மே . க ( நிரப்பி )
  4. உப்பு - அளவுக்கு
  5. அப்பசோடா - 1 தே . க ( மட்டமாக )
  6. ஐஸ் தண்ணி - அளவிற்கு
  7. கோதுமை மாவு - 2 மே . க . ( நிரப்பி ) பலகைக்கு பூச
  8. தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல்

செய்முறை :-

  • கோதுமை மாவு , ஆட்டா மாவுடன் அப்பா சோடாவை கலந்து இரண்டு முறை அரித்துப் பத்திரத்தில் போட்டுக்கொண்டு , அளவிற்கு உப்பும் மாஜரினும் இட்டு பிசிறி சேர்த்துக் கொள்ளக .

  • பின்பு மாவினுள் அளவிற்கு ஐஸ் தண்ணீர் விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக பிசைந்து குழைத்து நான்கு மணி நேரத்திற்கு வைத்துக் கொள்க .

  • மாக்கலவையை ஓரளவான உருண்டைகளாக எடுத்து மா பூசிய பலகையில் வைத்து  உருளையால் 1/4" தடிப்பாக இருக்கும் வண்ணம் உருட்டி சுட்டுவிரல் அளவுள்ள வட்டங்களாக வரும் வண்ணம்  வெட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்க .

  • இப் பூரிகளை உருளை கிழங்கு மசாலாக் கறியுடன் பரிமாறலாம் .

இட்லி

 idli_zps9b36a3ac.jpg 


30 - 35 இட்லிகள் 

தேவையான பொருட்கள்

  1. உடைத்த உளுந்து - 250 கிராம்
  2. ரவை - 500 கிராம்
  3. உப்பு - அளவிற்கு
  4. பேக்கிங் பவுடர் - 1 தே . க . ( மட்டமாக )
  5. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே  . க . ( நிரப்பி )
  6. சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 1 தே . க .
  7. பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை
  8. கடுகு - 1 சிட்டிகை
  9. தேங்காய் எண்ணெய் - 2 மே. க .


செய்முறை :-

  • உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து கழுவிப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க .

  • ரவ்வையை அரித்து நீராவியில் அவித்து மீண்டும் அரித்து வைத்துக் கொள்க 

  • பின்பு அரைத்த உளுந்தை வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் இட்டு ர்வ்வயையும் இட்டு அளவாக தண்ணீர்விட்டு  இறுக்கமான கூழ் பதமாக கரைத்து 6 மணி நேரம் வரை  புலிக்க வைத்து கொள்க .

  • தாய்ச்சியில் எண்ணெய்  விட்டு  கொதிக்க விட்டு கடுகை போட்டு வெடிக்க வைத்து அதனுள் வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , பெருஞ்சீரகம் என்பவற்றை போட்டு தாளித்து எடுத்துக் கொள்க .

  • பின்பு புலிக்க வைத்துள்ள மா கலவையில் தாளித்ததையும் , பேக்கிங் பவுடரையும் அளவுக்கு உப்பும் இட்டு நன்கு அடித்துக் கரைத்துக் கொள்க .

  • பின்பு இட்லி சட்டியை அடுப்பில் வைத்து நீர் நன்கு கொதித்ததும் தட்டுக்களுக்கு மேல்  " லஞ்ச் " பேப்பரை விரித்துக் கொண்டு இட்லிகளை ஊற்றி அவித்தேடுத்துக் கொள்க .

  • இட்லிகளை பரிமாறும்போது சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம் .

பொம்பே ரோஸ்ட்


  bomberoast_zps5e5da615.jpg

 12 துண்டுகள் 

தேவையான பொருட்கள்

  1. பாண் - 1 இறாத்தல் ( 12 துண்டு )
  2. முட்டை - 2
  3. பால் - 11/2 போத்தல்
  4. வனிலா - 1 மே. க ( நிரப்பி )
  5. மாஜரின் ( தோசை கல்லுக்கு பூசுவதுக்கு )- 1 மே. க. ( நிரப்பி )

சீனிக்கு பதிலாக அளவாக மிளகு தூள் , உப்பு தூள் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் .

செய்முறை :-
  • பாணின்  நான்கு கரைகளையும்  வெட்டி நீக்கிவிட்டுப் பாணின்   உட் பகுதியை  மட்டும் 1/2" தடிப்பான 12 துண்டுகளாக வெட்டி வைத்து கொள்க 

  • பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு சீனியும் சேர்த்து அடித்துக் கொண்டபின் காய்ச்சி நன்கு ஆறிய  பாலை அடித்த முட்டையினில் விட்டு வனிலாவும் சேர்த்து அடித்துக் கொள்க .

  • பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் . சிறிதளவு மாஜரினைப் போட்டு உருகியதும் பரவலாக புரட்டிக் கொண்டபின் பாண் துண்டுகளை அடித்து வைத்துள்ள கலவையில் தோய்த்துதோசைகல்லில் போட்டு வாட்டி எடுத்தபின் பரிமாறலாம் .

குறிப்பு :-

ஒவ்வொரு தடவையும் பாண் வாட்டுவதட்கு முன்பு சிறிதளவு மாஜரினை போட்டு உருகிய பின்னரே பாணை  வாட்டுதல் வேண்டும்

உப்புமா

 uppumaa1_zps68dff86d.jpg


2-3 பேருக்கு போதுமானது .

தேவையான பொருட்கள் :-
  1. ரவ்வை - 250 கிராம்
  2. கரட் - 100 கிராம்
  3. லீட்ஸ் - 100 கிராம்
  4. உருளை கிழங்கு - 250 கிராம்
  5. சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மேசை கரண்டி ( நிரப்பி )
  6. மாஜரின் - 1 மேசை கரண்டி நிரப்பி அல்லது நல்லெண்ணெய் 3 மே .க.
  7. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 3 மேசை கரண்டி ( நிரப்பி )
  8. சிறிதாக வெட்டிய பச்சை/ செத்தல்  மிளகாய் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
  9. மிளகு தூள் - அளவிற்கு
  10. உப்பு தூள் - அளவிற்கு
  11. கொதி நீர் அல்லது ஒரு பாதி தேங்காயில் பிழிந்த பால் - 1- 11/2 தம்ளர் 

செய்முறை :-
  • ரவையை  அரித்து சிறிதாக வறுத்து எடுத்து  வைத்துக் கொள்க .

  • கரட் , லீட்ஸ் ஆகியவற்றை கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க .

  • உருளை கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்துக் கொள்க .

  • தாச்சியில்  ஒரு மேசை கரண்டி மஜரினை இட்டு உருகி கொதித்ததும் , அதனுள் வெட்டிய உருளை கிழங்கு , கரட் , லீட்ஸ் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை  வகைகளை போட்டு வதங்க விட்டு  உருளை கிழங்கு வதங்கியபின்   உப்பு . மிளகு தூள் போட்டு சேர்த்து பிரட்டி மூடி சிறிது நேரம் வதங்க விடவும் .

  • சிறிது நேரத்தில் இதனுள் வறுத்து வைத்துள்ள றவ்வையை கொட்டிக் கிளறி கொத்தி நீர் அல்லது தேங்காய் பால் 1 தம்ளர் விட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கிளறி , அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும் .

குறிப்பு :-
  • பிடித்தமானவர்கள் கடுகு 1 தே. கரண்டி , பெருஞ்சீரகம் 1 தே. கரண்டி சேர்த்து மரக்கறிகளுடன் வதங்க விடலாம் . வாசனையாக இருக்கும் .

  • உப்புமாவை பரி மாறும் போது விரும்பினால் 2 முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம் .   

  • அல்லது முட்டைகளை உப்பு சிறிதளவு மிளகாய் / மிளகு தூள் போட்டு வறுத்து சேர்த்து கொள்ளலாம் .

  • அலது மரக்கறி வகைகள் நன்கு வேகி வந்தவுடன் இரண்டு முட்டைகளை அதனுள் அடித்து ஊற்றி நன்கு கிளறி சேர்த்துக் கொண்ட பின்பு ரவ்வை கொட்டி கிளறிக் கொள்ளவும் .

  • அல்லது 20 - 25 இறால் வரை  பொரித்து  சேர்த்துக் கொள்ளலாம் .

டுபாய் ரொட்டி

 dubairotti_zps205701a5.jpg


 8 ரொட்டிகள்

தேவையான பொருட்கள் :-

  1. கோதுமை மாவு - 250 கிராம்
  2. கரட் - 100 கிராம்
  3. லீட்ஸ் - 100 கிராம்
  4. உருளை கிழங்கு - 100 கிராம்
  5. கறிமிளகாய் - 100 கிராம்
  6. சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
  7. சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
  8. மிளகாய் தூள் - அளவிற்கு
  9. உப்பு தூள் - அளவிற்கு
  10. மாஜரின் , அல்லது தேங்காய் எண்ணெய் - 2 மேசை கரண்டி
  11. முட்டை 
             

செய்முறை :-
  • கரட் , லீட்ஸ், உருளை கிழங்கு , கறிமிளகாய்  ஆகியவற்றை கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க .

  • கோதுமை மாவை அரித்து வைத்துக் கொள்க .

  • முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து விட்டு நன்றாக அடித்துக் கொள்க .

  • தாச்சியில்  ஒரு மேசை கரண்டி மாஜரினை இட்டு உருகி கொதித்ததும் , அதனுள் வெட்டிய மரக்கறி வகைகளை போட்டு அரைப் பதமாக வதங்க விட்டு வதங்கியபின் அதனுள்  வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து போட்டு மூடி வதங்க விடவும் .

  • மரக்கறி வகைகள் வதங்கியவுடன்  உப்பு . மிளகு தூள் போட்டு சேர்த்து இறக்கி கொள்க .

  • பின்பு அரித்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு ,வதங்கிய மரக்கறிகளையும் அதனுள் போட்டு சேர்த்துக் கொண்டபின் , அடித்து வைத்துள்ள முட்டையை , சிறிது சிறிதாக  ஊற்றி  நன்கு பிசைந்து , தண்ணீரும் அளவிற்கு விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைத்து எடுத்து எட்டு சம அளவான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்க .

  • பின்பு தோசை கல்லில் சிறிதளவு மாஜரினை இட்டு பாரவிகொண்டபின் , ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து ஒரு அப்பமளவு வட்டமாக தட்டி கல்லில் இட்டு இரு புறமும் திருப்பி வேகவிட்டு எடுத்துக் கொள்க .

  • ஒவொரு முறையும் ரொட்டி வேக வைக்க முன் என்னை அலது மாஜரின் தடவிக் கொள்க .

குறிப்பு :-

  • இதற்க்கு முட்டை சேர்க்காமல் தண்ணீரை அளவிற்கு விட்டும் குழைத்துக் கொள்ளலாம் .

  • நோயாளிகளுக்கு மரக்கறிகளை அவித்து பாவிப்பது சிறந்தது .

  • தேங்காய் சம்பல் , சீனி சம்பல் இவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம் .

வெள்ளை அப்பம்

 vellaiappam_zpsd61275ff.jpg


15- 20 அப்பங்கள் 

தேவையான பொருட்கள் :-

  1. வறுத்து அரித்த வெள்ளை அரிசி மாவு - 1 சுண்டு ( நிரப்பி )
  2. பெரிய தேங்காய் - 1
  3. இளநீர் - 1 தம்ளர்
  4. ஈஸ்ட் - 1 தே. க . ( மட்டமாக ), அலது கள்ளு  4 மே . க
  5. சீனி - 1 தே . க .(  நிரப்பி )
  6. சுடு நீர் - 2 மே . க .
  7. உப்பு - அளவிற்கு
  8. தேங்காய் எண்ணெய் - 2 மே . க .
             

செய்முறை :-
  • பாத்திரத்தில் , ஈஸ்டையும் சீனியையும் இட்டு 2 மேசை கரண்டி சுடு நீர் ( நன்றாக சூடானது ) விட்டு மூடி , நோதிப்பதர்காக 1/2 மணி நேரம் வரை வைத்துக் கொள்க . அல்லது இக் கலவைக்கு பதிலாக கள்ளை பாவிக்கலாம் .

  • வெள்ளை அரிசி மாவை நான்கு முறை நன்றாக அரித்துக் கொள்க .

  • அரித்த மாவை பாத்திரத்தில் இட்டு , ஈஸ்ட் கரைசல் அல்லது கள்ளு , இளநீர் என்பவற்றை விட்டு நன்கு சேர்த்துக் கொண்டபின் , அளவாக தண்ணீர் விட்டு இடியப்ப மா பதத்திற்கு அடித்துக் குலைத்துக்கொண்டு ஓரளவான உருண்டைகளாக உருட்டி பாத்திரத்தில் இட்டு மூடி , 12 மணி நேரம் வரை புலிக்க வைத்துக் கொள்க .

  • பின்பு தேங்காயை துருவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிழிந்து 3 தம்ளர் பாலை எடுத்துக் கொள்க .

  • பின்பு புலிக்க வைத்துள்ள மா உருண்டைகள் வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து , அதனுள் தேங்காய் பாலை சிறிது சிறிதாக விட்டு அளவிற்கு உப்பு நீரும் சேர்த்து , ஓரளவு நீர் பதமாக கரைத்து வைத்துக் கொள்க .

  • அப்பம் சுடுவதற்கு ஏற்ற சிறிய தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் பூசிகொண்டபின் 1 கரண்டியளவு ( Desserts Spoon ) மாவை ஊற்றி தாச்சியை  தூக்கி   ஒரு முறை சுற்றிக் கொண்டபின் ஒரு மூடியால் சிறிது நேரம் மூடிவைத்து வெந்தபின்பு எடுத்துப் பரிமாறலாம் .


 குறிப்பு :-

விரும்பினால் வாழைபழம் மாம் பழம்  போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் . குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .

விக்டோரியா சான்ட்விச்

 victoria-sandwich1_zpse6e5c52d.jpg 


15- 20 துண்டுகள்

தேவையான பொருட்கள் :-
  1. மாஜரீன் - 125 கிராம்
  2. அரைத்த சீனி - 125 கிராம்
  3. முட்டை - 2
  4. மா - 125 கிராம்
  5. கொக்கோ பவுடர் - 1 மே . க . ( நிரப்பி )
  6. ஸ்ராபரி ஜாம் - 3 மே . க  

செய்முறை :-
  • மாவுடன் கொக்கோ பவுடர் கலந்து ஐந்துமுறை அரித்துக் கொள்க 

  • பாத்திரத்தில் மாஜரினை இட்டு அரைத்த சீனியை சேர்த்து நன்றாக அடித்தபின் , ஒரு முட்டையை சேர்த்து அடித்து , மாவில் அரைவாசியை சிறிது சிறிதாக தூவிச்  சேர்த்துக் கொண்டபின் மற்றைய முட்டையை விட்டு அடித்து மிகுதி மாவை சேர்த்து அடித்துக் கொண்டபின் , மாஜரீன் பூசிய தட்டிலூற்றி 345°F  இல் 30 - 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து , சான்ட்விச் நன்றாக ஆறியபின் , நடுவாக இரண்டு சம பாதியாக பிளந்து ஒரு துண்டிற்கு  ஜாம் பூசி மறு துண்டால் மூடியபின் துண்டுகளாக வேட்டிஎடுத்துப் பரிமாறலாம் .

சான்ட்விச்

  sandvich_zps6756c231.jpg

சான்ட்விச்

                                                                                                                 15- 20 துண்டுகள் 


( கட்டுப் போசனத்திட்கு உகந்தது )


தேவையான பொருட்கள் :-


  1. பாண் - 1 இறாத்தல்
  2. கரட் - 100 கிராம்
  3. பீற்றூட் - 100 கிராம்
  4. உருளை கிழங்கு - 200 கிராம்
  5. உப்புத்தூள் - அளவிற்கு
  6. மிளகுதூள் - அளவிற்கு
  7. மாஜரீன் - 100 கிராம்
  8. பச்சை கலரிங் - 1 தேக்கரண்டி

செய்முறை :-
  • பானின் சுற்றிவர உள்ள கரைப்பகுதி யாவற்றையும் வெட்டி நீக்கிவிட்டு , நடுப்பகுதியை மட்டும் பன்னிரண்டு சம துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க . அல்லது சான்ட்விச் பானை பயன்படுத்தவும் .

  • பீற்றூட் , கரட் , உருளை கிழங்கு என்பவற்றை தோல் நீக்கித் துப்பரவாக்கி கழுவித் தனித் தனியாக அவித்தெடுத்து கொள்க .

  • பின்பு பீட்ரூட்டை தனியாக எடுத்து ஸ்க்றேப்பரில் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கி கொண்ட பின்பு அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு 

  • சேர்த்து வைத்துக்கொள்க .

  • அவ்வண்ணமே கரட்டையும் ஸ்க்றேப்பரில் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கி கொண்ட பின்பு அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு 

  • சேர்த்து வைத்துக்கொள்க .

  • உருளை கிழங்கை பிறிதொரு பாத்திரத்தில் மசித்து இடியப்ப உரலில் இட்டு பிழிந்தெடுத்து அதனுள்ளும்  ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்பு தூள் , மிளகு தூள்  என்பன இட்டு சேர்த்து வைத்துக்கொள்க .

  • பின்பு மிகுதியாகவுள்ள மஜாரினை பாண் துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும் பூசிக் கொள்க .

  • பின்பு மாஜரின் பூசிய ஆறு பாண் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு பாண் துண்டிட்கும் முதலில் பரவலாக உருளைக்கிழங்கு கலவையையும் . அதன்மேல் பரவலாக பீற்றூட் கலவையையும் , அதன் மேல் பரவலாக கரட் கலவையையும் பூசி பிறிதொரு பாண் துண்டினால் மூடி அழுத்திக் கொண்ட பின்பு 1 மணி நேரம் வரை குளிர் சாதன பெட்டியுள் வைத்து எடுத்து , ஒவ்வொரு பாண் துண்டையும் மூலைக்கு குறுக்காக வெட்டி இரண்டு முக்கோண துண்டுகளாக்கி கொண்டபின்பு பரிமாறலாம் .

குறிப்பு :-

சான்ட்விச் ப்ரட் டை வாங்கி மேலே கூறியதுபோல்
கலவைகளைப் படையாக பூசிகொண்டபின்  பாய் போல சுற்றி எடுத்து , ஓர் ஒயில் பேபரில் வைத்து  இறுகச் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து , பின்பு வில்லைகள் போல வெட்டி எடுத்து பரிமாறலாம் . இது PIN  Wheel  சான்ட்விச் எனப்படும் .

Flag Counter