கோழி சூப்

 photo kolisoup_zps2690498d.jpg

 



6 - 8  பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

  1. குஞ்சுக் கோழி - 1
  2. வெங்காயம் - 250 கிராம்
  3. உள்ளி - 5 பல்லு
  4. மிளகு  - 1 மே . க ( நிரப்பி )
  5. மல்லி - 1 மே . க ( நிரப்பி )
  6. வெந்தயம் - 1 மே . க ( நிரப்பி )
  7. நற்சீரகம் - 1 மே . க ( நிரப்பி )
  8. கறுவா - 3" ஒரு துண்டு
  9. மஞ்சள் - ஒரு துண்டு
  10. கராம்பு - 10
  11. தேசிப் பழம் - 2
  12. உப்பு - அளவிற்கு 
  13. தண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )


செய்முறை :
  • மிளகு . மல்லி , வெந்தயம் , நற்சீரகம் , கருவா , மஞ்சள் ,கராம்பு என்பவற்றை ஓரளவாக வறுத்து நன்றாக இடித்து எடுத்துப் பொட்டலமாக கட்டி வைத்துக் கொள்க ( பொட்டலம் மெல்லிய துணியில் தளர்வாக கட்டபாடல் வேண்டும் )

  • வெங்காயம் உள்ளி என்பவற்றை துபரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க 

  • கோழியின் எலும்புள்ள தசை பகுதியை இயலுமான அளவு வெட்டி நீக்கிவிட்டு எலும்பை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்க .

  • பின்பு பானையில் 12 தம்ப்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் வெட்டிய வெங்காயம் , உள்ளி , நொறுக்கிய எலும்பு என்பவற்றை போட்டு அவிய விடவும். 

  • இவை அரைப்பதமாக அவிந்ததும் கட்டிவைத்துள்ள பொட்டலம் அளவிற்கு உப்பு என்பவற்றை இட்டு  மெல்லிய நெருப்பில் மூடி அவியவிட்டு நன்றாக அவிந்து நீர் அரைப்பதமாக வற்றி வரத்தொடங்கியதும் இறக்கி வடித்து தேசிப்பழச்சாறு கலந்து பரிமாறலாம் .

மரக்கறி சூப்

 photo marakarisoop_zps476857dd.jpg




8 - 10 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
  1. வெங்காயம் - 100 கிராம்
  2. கரட் - 100 கிராம்
  3. கோவா - 100 கிராம்
  4. லீட்ஸ் - 100 கிராம்
  5. தக்காளி - 100 கிராம்
  6. உருளை கிழங்கு - 100 கிராம்
  7. பருப்பு - 100 கிராம்
  8. கறிவேப்பிலை - 1 நெட்டு
  9. உள்ளி - 5 பல்லு
  10. மிளகு தூள் - அளவிற்கு
  11. உப்புத்த் தூள் - அளவிற்கு
  12. தேசிப் பழம் - 1
  13. தண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )
  14. சிக்கின் கியூப் - 2 கட்டி ( விரும்பினால் )

செய்முறை :
  • மரக்கறி , உள்ளி வெங்காயம் என்பவற்றை துப்புரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க . 

  • பின்பு பாத்திரத்தில் 12 தம்ப்ளர் தண்ணீரை விட்டு வெட்டி வைத்துள்ள மரக்கறி வகைகள் , கறிவேப்பிலை , கழுவிய பருப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

  • மரக்கறி நன்றாக அவிந்த பின்பு சிக்கின் கியூப் . உப்பு என்பவற்றை அளவிற்கு சேர்த்து நன்றாக மசித்துக் கொண்ட பின்பு சூப்பை வடித்தெடுத்து மிளகு தூள் , தேசிப்புளி என்பவற்றை இட்டு  கலந்து சூட்டுடனேயே பரிமாறலாம் . 


சீராக அரையல்


 photo seragavaruval_zps6346a2ca.jpg
 
 
2 - 3 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

  1. சீரகம் - 25 கிராம்
  2. மஞ்சள் - 1 துண்டு
  3. மிளகு - 10
  4. வேர்க்கொம்பு - 1துண்டு
  5. உள்ளி - 3 பல்லு
  6. பழப்புளி - பாக்களவு
  7. உப்பு - அளவிற்கு முட்டை - 2 அல்லது அவித்த சுறா மீன் 4 துண்டு
  8. நல்லெண்ணெய் - 2 மே. க
  9. தண்ணீர் - 2 தம்ளர்

செய்முறை :

  • அம்மியை துப்புரவு செய்து வேர்க்கொம்பு , மஞ்சள் என்பவற்றை நொறுக்கி அரைத்து பின் உள்ளி , மிளகு , சீரகம் என்பவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீரும் விட்டு பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க .

  • அரைத்த கூட்டை தாய்ச்சியில் இட்டு 2 தம்ப்ளர் தண்ணீரில் கரைத்த புளிகரைசலை விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து , பொங்கி கொதித்ததும் அளவிட்ட்கு உப்பு சேர்த்து முட்டையை உடைத்துவிட்டு முட்டை அவிந்து வரும் நிலையில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி சூட்டுடனேயே பரி மாறலாம் .

குறிப்பு :

வேர்க்கொம்பு , மஞ்சள் , மிளகு , சீரகத்தூள்கள் இருப்பின் கிரைண்டரில் இட்டு அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்து மேற்கூறிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம் .
 
 
 
 

பார்லிக்கஞ்சி

 photo BAA0BBE0BB00BCD0BB20BBF0B950BCD0B950B9E0BCD0B9A0BBF0_zps417c3179.jpg

 


4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
  1. பார்லி - 2 மே . க ( நிரப்பி )
  2. உப்பு - அளவிற்கு
  3. தண்ணீர் - 5 தம்ப்ளர்

செய்முறை :
  • பார்லியை கழுவி வைத்துப் பாத்திரத்தில் போட்டு முக்கால் மணி நேரம் ஊறவிட்டு மீண்டும் தண்ணீரை வடித்துவிட்டு பார்லியை தாய்ச்சியில் போட்டு 5 தம்ளர் தண்ணீரை விட்டு வேகவிடவும் .

  • பார்லி கஞ்சி வேகும்போது  நீர் மெல்லிய றோஸ் நிறத்தை அடையும் பருவத்தில் இறக்கி வடித்து அளவிற்கு உப்பு சேர்த்துக் கலக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

குறிப்பு :
  • உப்புக்கு பதிலாக தேசிப்புளியும் சீனியும் விருப்பதிற்கு ஏற்றவாறு சேர்த்து பரிமாறலாம் 

  • பார்லிக்கு பதிலாக சவ்வரிசியை பாவித்து இவ்வனமே கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம் .

  • சவ்வரிசியாயின் மெல்லிய சாம்பல் நிறத்தை அடையும்போது இறக்கி வடிக்கவும்

புளிக்கஞ்சி

 photo pulikanchi_zps0ddf7793.jpg

 
3 - 4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :



  1. புழுங்கலரிசி - 1 சுண்டு
  2. நெத்தலி கருவாடு - 100 கிராம்
  3. வெங்காயம் - 100 கிராம்
  4. செத்தல் மிளகாய் - 10
  5. மஞ்சள் - 1 சிறிய துண்டு
  6. மிளகு - 10
  7. உள்ளி - 10 பல்லு
  8. கறிவேப்பிலை - 2 நெட்டு
  9. தேங்காய் - பாதி
  10. பழப் புளி ( விதை நீகியக்து ) - ஒரு பாக்களவு
  11. உப்பு - அளவிற்கு
  12. தண்ணீர் - 3 1/2 போத்தல்

செய்முறை :
  • தேங்காயை துருவி ஒரு தம்ப்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பால் பிழிந்து வைத்துக் கொள்க .

  • கருவாட்டை கழுவி வைத்துக் கொள்க 

  • வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க .

  • பழப்புளியை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்க .

  • செத்தல் மிளகாய் , உள்ளி ,மிளகு , மஞ்சள் என்பவற்றை அளவிற்கு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க.

  • பின்பு பாத்திரத்திலிட்டு 3 போத்தல் தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்கு கொதித்த பின்பு அரிசியை கழுவிப்போட்டு அவியவிடவும் . அரிசி அரைப் பதமாக அவிந்தவுடன் கருவாடு , வெங்காயம் கறிவேப்பிலை என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

  • அரிசி நன்றாக அவிந்ததும் அரைத்த கூட்டு , பால் கரைத்து வைத்துள்ள பழப்புளி அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு கலந்து மூடி வாசம் வரும்வரை அவியவிட்டு இறக்கி சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

சமையலறை குறிப்புகள் பகுதி - 5

 cooking tips

  • பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

  • வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

  • சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

  • சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

  • தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்

  • உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

  • கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

  • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

  • தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

  • பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
  • இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

  • தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

  • எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

சமையலை ரு‌சியா‌க்க கு‌றி‌ப்புக‌ள்- சமையலறை குறிப்புகள் பகுதி 4

cooking tips
  • குடைமிளகாய் ஸ்டஃப்பிங் செய்யும்போது அது முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாகக் காணப்படும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்
  • நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும். ஸ்பைசியாகவும் காணப்படும்.
  • எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும், சுவையு‌ம் இது எ‌ன்ன புது‌க் கு‌ழ‌ம்பு எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்.
  • எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். ஆக்ஸிடைஸ் ஆவதால் நிகழும் அழுகை குறையும்.
  • அரோக்கியத்திற்கு, கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

Flag Counter