3 - 4 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் :
- புழுங்கலரிசி - 1 சுண்டு
- நெத்தலி கருவாடு - 100 கிராம்
- வெங்காயம் - 100 கிராம்
- செத்தல் மிளகாய் - 10
- மஞ்சள் - 1 சிறிய துண்டு
- மிளகு - 10
- உள்ளி - 10 பல்லு
- கறிவேப்பிலை - 2 நெட்டு
- தேங்காய் - பாதி
- பழப் புளி ( விதை நீகியக்து ) - ஒரு பாக்களவு
- உப்பு - அளவிற்கு
- தண்ணீர் - 3 1/2 போத்தல்
செய்முறை :
- தேங்காயை துருவி ஒரு தம்ப்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பால் பிழிந்து வைத்துக் கொள்க .
- கருவாட்டை கழுவி வைத்துக் கொள்க
- வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க .
- பழப்புளியை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்க .
- செத்தல் மிளகாய் , உள்ளி ,மிளகு , மஞ்சள் என்பவற்றை அளவிற்கு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க.
- பின்பு பாத்திரத்திலிட்டு 3 போத்தல் தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்கு கொதித்த பின்பு அரிசியை கழுவிப்போட்டு அவியவிடவும் . அரிசி அரைப் பதமாக அவிந்தவுடன் கருவாடு , வெங்காயம் கறிவேப்பிலை என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .
- அரிசி நன்றாக அவிந்ததும் அரைத்த கூட்டு , பால் கரைத்து வைத்துள்ள பழப்புளி அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு கலந்து மூடி வாசம் வரும்வரை அவியவிட்டு இறக்கி சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .
0 comments:
Post a Comment